காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூடு! அதிர்ந்த உலக மக்கள்!

Kabul airport shooting People of the shocked world!

காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூடு! அதிர்ந்த உலக மக்கள்! ஆப்கானிஸ்தானில் தலீபான்களில் அனைத்து மாகாணங்களையும் கைப்பற்றியது. அதன் காரணமாக பலர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். பல நாடுகளும் தன் தாய் நாட்டு மக்களை வெளியேறவும் உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள ஆப்கனின் மக்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து  மக்கள் பலரும் தங்களது உயிரை காப்பாற்றும் விதமாக விமான நிலையங்களுக்கு சென்று தப்பவே நினைப்பது குறிப்பிடத் … Read more

இவர்களை தலீபான்கள் தடுக்க கூடாது! இத்தனை நாடுகளா வலியுறுத்தியது?

The Taliban should not stop them! So many countries insisted?

இவர்களை தலீபான்கள் தடுக்க கூடாது! இத்தனை நாடுகளா வலியுறுத்தியது? தற்போது ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுவதுமாக கைப்பற்றி விட்டனர். மிகப்பெரிய மாகாணங்கள் எல்லாவற்றையும் பெரும்பாலும் கைப்பற்றி விட்டனர். அதன் காரணமாக ஆப்கன் தலைவர் அங்கிருந்து வெளியேறி விட்டார். அதை தொடர்ந்து அனைத்து நாடுகளும் அங்குள்ள தனது நாட்டு மக்களை வெளியேறச் சொல்லி கேட்டுக் கொண்டுள்ளன. தலீபான்கள் பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடம் அளிக்க மாட்டோம் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்கா தனது படைகளை … Read more

விமான நிலையத்தில் இப்படியா? கொலம்பியா மாணவனால் ஏற்பட்ட பதற்றம்!

Is it like this at the airport? Tension caused by a Colombian student!

விமான நிலையத்தில் இப்படியா? கொலம்பியா மாணவனால் ஏற்பட்ட பதற்றம்! சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில், இருந்து டெல்லி செல்ல விமானம் தயாராக இருந்தது. அப்போது அங்கு இருந்தவர்களுக்கு எப்பொழுதும் போல பரிசோதனைகள் நடைபெற்றது. அந்த பரிசோதனையில் பிளஸ் டூ படித்து வரும் கொலம்பியா நாட்டைச்சேர்ந்த லூயிஸ் என்ற 19 வயது மகன், அவனது தாய், மற்றும் தங்கையுடன் டெல்லி செல்வதற்காக அந்த விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் இவர்களையும், இவர்களது உடமைகளையும் ஸ்கேனிங் முறையில் … Read more

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு தயார்!  தமிழக அரசு தயாரா?அமைச்சரின் அதிரடி!

Federal government ready to reduce petrol and diesel prices! Is the Tamil Nadu government ready? Minister's action!

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு தயார்!  தமிழக அரசு தயாரா?அமைச்சரின் அதிரடி! நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மக்களை பெரிதும் கவலை கொள்ள  வைக்கிறது. மேலும் வாகனங்கள் வைத்துள்ள அனைத்து மக்களும் இதனால் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இது தவிர ஒரு புறம் கேஸ் சிலிண்டர் விலையும் தொடர்ந்து  உயர்வதால் இல்லத்தரசிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம் … Read more

பொறுமையை இழந்த இந்தியர்! அதனால் கிடைத்த சிறை தண்டனை!

Impatient Indian! So got the prison sentence!

பொறுமையை இழந்த இந்தியர்! அதனால் கிடைத்த சிறை தண்டனை! சிங்கப்பூரின் ஜுராங் பெஞ்சுரு நகரில் தங்கியிருந்து இந்தியர் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். பாலச்சந்திரன் பார்த்திபன் 26 வயதானவர். இவர் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு மே மாதம் இவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டதை  தொடர்ந்து, அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரிசோதனையின் முடிவுகள் வெளியாகும்வரை ஆஸ்பத்திரி … Read more

பார்சல்களில் வந்த சிலந்திகள்! அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்!

Spiders in parcels! Shocked officers!

பார்சல்களில் வந்த சிலந்திகள்! அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்! இந்த செய்தியை பார்க்கும் போது இதெல்லாம் கூடவா செய்வார்கள், கடத்துவார்கள் என்று உங்களுக்கு தோன்றும். ஆனால் இதையெல்லாம் கடத்துகிறார்கள். முதுகெலும்பு இல்லாத உயிரினங்களை கடத்தி அதன் மூலம் சிலர் லாபம் பார்க்கின்றனர். அவர்களையெல்லாம் நாம் என்னவென்று கூறுவது. அவைகளை தேசவிரோதிகள் என்று தானே கூற வேண்டும். வாருங்கள் இந்த செய்தியை பற்றி பார்க்கலாம். சென்னையில் மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் பார்சலில் முதுகெலும்பில்லாத உயிரினங்கள் பல கடத்தப்படுவதாக சுங்கத்துறை … Read more

விமான நிலையத்தில் புதிய முறையை கொண்டுவந்துள்ள துபாய்

துபாயில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் சர்வதேச விமான நிலையத்தில் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல தொடங்கியுள்ளனர். அதேபோல் வெளிநாடுகளில் இருந்து துபாய்க்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. விமானத்திற்கு செல்லும் பயணிகள் தங்கள் பாஸ்போர்ட்டின் முகப்பு பகுதியை ‘ஸ்மார்ட் கேட்’ நுழைவு பகுதியில் உள்ள உணரும் கருவியில் வைத்தால் போதும். தானியங்கி முறையில் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு குடியேற்ற பிரிவை கடந்து செல்ல அனுமதி வழங்கப்படும். அதாவது கண்ணாடி கதவு தானாக திறந்து வழிவிடும். இதன் … Read more

விமான நிலையத்தில் வெடித்த ராக்கெட் குண்டுகள்

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 2 ராக்கெட் குண்டுகள் விழுந்து வெடித்தன. தூதரகங்கள், அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு கொண்ட பசுமை மண்டல பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் உருவானது. காலியான இடத்தில் ராக்கெட் விழுந்து வெடித்ததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் மட்டும் நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் இது என்றும் ராணுவம் கூறி உள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த … Read more

திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார்மயம்: அதானி குழுமத்திற்கும் கேரளா கம்யூனிஸ்ட் அரசுக்கும் இடையே தொடர்பு?

அதானியின் குழுமத்திற்கும், கேரள கம்யூனிஸ்ட் அரசிற்கும் இடையே ஏற்கனவே தொடர்பு இருப்பதாக கேரளாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையத்தை 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்திற்கு குத்தகையாக மத்திய அரசு வழங்கியுள்ளது. கேரள அரசு இந்த முடிவினை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் மத்திய அரசின் இந்த முடிவிற்கு அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சி என அனைவரும் கேரளா அரசிற்கு உறுதுணையாக இருந்தனர். இதனைத் தொடர்ந்து கேரளாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா … Read more

விமான நிலையத்தில் கனிமொழி எம்.பிக்கு என்ன நேர்ந்தது என்று தெரியுமா.!?

திமுக வின் மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி விமான நிலையத்திற்கு வருகைபுரிந்த போது சோதனை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரி (CISF) சோதனை மற்றும் பாதுகாப்பு குறித்து கனிமொழியிடம் இந்தியில் கேட்டபோது எனக்கு இந்தி தெரியாது தமிழ்,ஆங்கிலம் தான் தெரியும் அதனால் எதுவாக இருப்பினும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கூறுங்கள் என்று கூறியுள்ளார் அதற்கு அந்த CISF அதிகாரி நீங்கள் இந்தியர் தானா ?என்று கேள்வி எழுப்பி … Read more