கொரோனா எதிரொலி : ஒரு முறை விமானச் சீட்டு வாங்கினால் பல முறை பயணம் செய்யலாம் எங்கே தெரியுமா?
உலகெங்கும் COVID-19 நோய்த்தொற்று பரவியுள்ள நிலையில், பல விமான நிறுவனங்கள் இனி மீண்டும் செயல்பட முடியுமா என்ற நிலையில் தவித்துக்கொண்டிருக்கின்றன. சீனாவில் விமானப் பயணிகளை ஈர்க்க அதிரடிச் சலுகைகளை வழங்கி வருகின்றன, அந்நாட்டு விமான நிறுவனங்கள். கொரோனா கிருமித்தொற்றால் நொடித்துப் போன விமானத்துறையை மீட்க கட்டணத்தைப் பல மடங்கு குறைத்துள்ளன; விமானப் பயணங்களை பயணிகள் மீண்டும் தொடர, நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு சலுகைகளை வாரி வழங்குகின்றன. இதுவரை 8 உள்நாட்டு விமான நிறுவனங்கள் சலுகைகள் பற்றி அறிவித்துள்ளன. … Read more