லஞ்சத்தை ஒழிப்பதற்கு உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அதிரடி கருத்து!

நெல் கொள்முதல் செய்யும் நிலையங்களை போதுமான அளவில் திறக்கக் கோரி, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை இன்று கிருபாகரன், புகழேந்தி தலைமையிலான நீதிபதிகளின் அமர்வு  பரிசீலனை செய்தது.  அப்போது அம்மனுவில், அரசு ஊழியர்கள் ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்பதாக சொல்லப்படுவது தவறான தகவல் என்றும் முறைகேட்டில் சம்பந்தப்பட்ட 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றைப் பற்றி விசாரணை நடத்திய நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.  நீதிபதிகள் கூறியதாவது, லஞ்ச … Read more

அரியர் தேர்வு ரத்து குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

இறுதி செமஸ்டர் தேர்வுகளை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடத்தும்போது, அரிய தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஏன் ஆன்லைன் மூலம் நடத்தக்கூடாது என்ற கேள்வியை உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ளது. இந்த கேள்விக்கு தமிழக அரசு பதிலளிக்கும்படி  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமன்றி, அரியர் தேர்வு ரத்து என்பது குறித்த பதில் மனுவை தாக்கல் செய்யாத பல்கலைக்கழகத்தின் மானியக் குழுவிற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரியர் தேர்வு ரத்து என்ற தமிழக அரசு எடுத்துள்ள இத்தகைய முடிவில் தங்களுக்கு உடன்பாடு இல்லை … Read more

மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கையில் முறைகேடு – விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

மருத்துவ மேற்படிப்பிற்கான சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது. அதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடுக்கப் பட்டிருந்தது. அந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும்படி தற்போது உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தக் கல்வியாண்டில் நடந்த மாணவர் சேர்க்கையின்போது 74 காலி இடங்களை தனியார் கல்லூரிகளுக்கு மீண்டும்  வழங்கியுள்ளனர் என்றும்  தனியார் மருத்துவ கல்லூரிகள் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை பணம் வாங்கிக்கொண்டு மேற்படிப்பிற்கான இடத்தை ஒதுக்கி தருவதை, நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார். இவ்வாறு முறைகேடு நடப்பதால் இது … Read more

ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

மருத்துவத்துறை படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், தமிழகத்திலுள்ள இதர  பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசால் வழக்கு தொடுக்கப்பட்டது. அதிமுகவுக்கு ஆதரவாக திமுக, பாமக போன்ற இதர கட்சிகளும் தங்களின் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும், தமிழக அரசுக்கு அளித்தது.  அதைத்தொடர்ந்து தமிழக அரசு மேற்கொண்ட வழக்கில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓபிசி மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு நடப்பு ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் … Read more

எம்.பி.ரவீந்திரநாத் குமாரின் மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

ரவீந்திரநாத் குமார் என்பவர் கடைசியாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது தேனி தொகுதியில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் ஆவார். அதுமட்டுமின்றி இவர் அதிமுக கட்சியை சேர்ந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகன்.  ரவீந்திரநாத் குமார் போட்டியிட்ட தேர்தலில், 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்பி ஆனார். ஆனால்  இந்த தேர்தலில் கிடைத்த வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி அதே பகுதியை சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். தற்போது … Read more

நீட் தேர்வுக்கான உள்ஒதுக்கீடு கிடைப்பதில் சிக்கல் – கண்கலங்கிய நீதிபதி!

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு பட்டியல் தயாரிப்பதில் தாமதம் காட்ட முடியுமா என்று மதுரை நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். கிராமப்புற மாணவர்களின் வேதனைகளையும், வருத்தங்களையும் அளவிடற்கரியது என்று கூறி நீதிபதி கண்கலங்கினார். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தர வேண்டிய மனு எந்த நிலையில் உள்ளது, நடப்பாண்டிலேயே மாணவர்களுக்கு ஒதுக்கீடு கிடைக்குமா என்பது குறித்த விசாரணை … Read more

மெரினா கடற்கரை! பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது: சென்னை மாநகராட்சி!

சென்னை மெரீனா கடற்கரையில் அக்‌. 31ம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்த வழக்கு ஒன்றில், கடற்கரைகளில் … Read more

வருமானம் வழக்கில்  சிக்கிய ஆஸ்கார்  நாயகனுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

இங்கிலாந்தை சேர்ந்த லிப்ரா மொபைல் நிறுவனத்திற்கு இசை ரிங் டோன் இசை அமைப்பதற்காக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான்  உடன் இந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஏ.ஆ.ர் ரகுமானுக்கு 3 கோடியே 47 லட்சம் ரூபாயை அந்நிறுவனம் நேரடியாக கொடுத்துள்ளது. இந்த பல பரிவர்த்தனையின் போது ஏ.ஆர். ரகுமான் வருமான வரி செலுத்த தவறிவிட்டதாக  வருமான வரித்துறை சார்பில் ஏ.ஆர்.ரகுமானின் மீது நடவடிக்கை எடுத்தது. அதன்பின் ஏ.ஆர். ரகுமான் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்றுக் கொண்ட … Read more

அரியர் மாணவர்களே தேர்வு எழுத தயாராக இருங்கள்:! அரியர் தேர்வைப்பற்றி தமிழ்நாடு அரசு கூறியது? முழுவிபரம்!

அரியர் மாணவர்களே தேர்வு எழுத தயாராக இருங்கள்:! அரியர் தேர்வைப்பற்றி தமிழ்நாடு அரசு கூறியது?முழுவிபரம்! கொரோனா பொது முடக்கம் காரணமாக,பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் மற்றும் AICTE, மற்றும் UGC-யின் வழிகாட்டுதலின்படி, இறுதியாண்டு அல்லாது தேர்வு கட்டணம் செலுத்திய அனைத்து அரியர் மாணவர்களும் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு,பல எதிர்ப்புகள் வந்த வண்ணமே இருந்தது. மேலும் இந்த விவகாரம் குறித்து தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் மற்றும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் … Read more

பெற்றோர்களே ஆறுதலான செய்தி:! கல்விக்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு!

பெற்றோர்களே ஆறுதலான செய்தி:! கல்விக்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு! தமிழகத்தின் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து பள்ளி கல்லூரிகளும், முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தை கருதியும்,கல்வி திறனை மேம்படுத்துவதற்காகவும், ஆன்லைன் மூலம் தனியார் பள்ளிகள் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றன.அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாகவும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் பெற்றோர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகள் 40% மட்டுமே கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்றும்,100 சதவீத கல்வி கட்டணத்தை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் … Read more