வித்தியாசமான தோற்றத்தில் வெள்ளை சுறா – இந்தோனேஷியா!

மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்கள் பல வித்தியாசமான கடல்வாழ் உயிரினங்களை பார்த்திருப்பார்கள். அவற்றின் செயல்களையும் கவனித்திருப்பார்கள். உதாரணமாக டால்ஃபின் என்றழைக்கப்படும் கடல் வாழ் உயிரினம், கடல் அலைகளின் மீது தாவி தாவி செல்வது காண்பவர்களை ரசிக்க வைக்கும். இதுபோல் பல வித்தியாசமான சம்பவங்கள் கடலில் நிகழ்ந்துள்ளது. தற்போது இந்தோனேஷியாவில் வெள்ளைநிற சுறா ஒன்று பிடிபட்டுள்ளது. கிழக்கு திசையின் நியூசா டென்காரா என்றழைக்கப்படுகின்ற கடல்பகுதியில் மீனவர்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அந்த மீனவர்கள் மீன்பிடித்துக் … Read more

ரத்த நிறத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு! மிதக்கும் இந்தோனேசியா!

flood of blood floating indonesia

ரத்த நிறத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு! மிதக்கும் இந்தோனேசியா! இந்தோனேசியாவில் ஜாவா எனும் தீவில் ஜெயிங்கோட் கிராமம் உள்ளது.இங்கு 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.ஜெயிங்கோட் கிராமம்,ஆடைகளை வடிவமைப்பதில் வல்லமை பெற்றது.குறிப்பாக பழங்கால முறையில்  ஆடைகளை தயாரிப்பதில் பேர் போனது.அவர்கள் தயாரிக்கும் ஆடைகளின் ரசாயனம் வெள்ளத்தில் கலந்து ஊர் முழுவதும் ரத்த நிறத்தில் மாறியது. அருகாமையில் இருக்கும் ஊர்களில் மஞ்சள் நிறத்தில் வெள்ள பெருக்கு தோன்றியது.அங்குள்ள ரசாயன கழிவுகள் நீரில் கலப்பதால் இவ்வாறு ஏற்படுகிறது என அந்நாட்டின் … Read more

முகக்கவசம் அணியவில்லை என்றால் மரண தண்டனையா?

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகையே புரட்டிப் போட்டு வருகிறது. எனவே உலக நாடுகள் அனைத்தும் பல கட்டுபாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாதவருக்கு கொடூரமான தண்டனை வழங்கப்படுகிறது. அங்கு முகக்கவசம் அணியாமல் இருந்த எட்டு பேருக்கு சவக்குழி தோண்டும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாமல் பலரும் பொது இடங்களில் அவ்வப்போது வலம்வருகின்றனர். மக்கள் முகக்கவசம் அணிவதை ஊக்குவிக்க, இந்தோனேசிய அரசாங்கம் பல வித்தியாசமான வழிகளைக் … Read more

இந்தோனேசியாவில் அதிகரிக்கும் கொரோனா

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய மூன்று நாடுகள் ஆகும். அதே போல இந்தோனேசியத் தலைநகர் ஜக்கர்த்தாவில் கொரோனா கிருமிப்பரவல் அதிகரித்துவருவதை முன்னிட்டு மீண்டும் முடக்கநிலை நடப்புக்கு வரவிருக்கிறது. இம்மாதம் 14ஆம் தேதியிலிருந்து பெரிய அளவிலான கட்டுப்பாடுகள் … Read more

உயிரிழந்த 12 வயது சிறுமி குளிப்பாட்டும் போது மீண்டும் உயிர் வந்த சம்பவம்!

உயிரிழந்த 12 வயது சிறுமி குளிப்பாட்டும் போது மீண்டும் உயிர் வந்த சம்பவம்! இந்தோனேஷியாவில் உயிரிழந்த 12 வயது சிறுமி இறுதிச் சடங்கின்போது குளிப்பாட்டும் போது உயிர் வந்து மறுபடியும் ஒரு மணி நேரத்தில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் சிட்டி மசபியுபாஹ் வார்டாஸ் என பெயர் கொண்ட சிறுமிக்கு12 வயது நிரம்பியுள்ள நிலையில் பல உடல் கோளாறுகளால் மருத்துவமனையில் 18 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அன்று மாலை மருத்துவர்களால் சிட்டி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் … Read more

முன் எச்சரிக்கையால் ஆபத்து நீங்கியது

உலகின் மிகப்பெரிய தீவு நாடான இந்தோனேசியாவில் சுமார் 267 மில்லியன் மக்கள் இருகின்றனர். இந்த தீவில் நிலநடுக்கம், சுனாமி மற்றும் எரிமலை வெடிப்பு  போன்ற இயற்கை ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடித்துள்ளது. 5,000 அடி உயரத்தில் புகை வெளியேறத் தொடங்கியுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள மக்கள் அனைவரும் வெளியேற்ற பட்டதால் இழப்புகள் தவிரக்ப்பட்டன.

மக்கள் வெளியேற்றபட்டதால் இழப்புகள் தவிர்க்கப்பட்டது

இந்தோனேசியாவில் உள்ள 120 எரிமலைகள் எந்த நேரத்திலும் வெடிக்க கூடிய நிலையில் உள்ளன. அதில் சினாபங் என்ற எரிமலையானது சில நேரங்களில் வெடித்து அவ்வபோது சிலபேர் இறந்துள்ளனர். அந்த வகையில் தற்போதும் அந்த எரிமலை வெடித்துள்ளது ஆனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றபட்டனர் அதன் காரணமாக இழப்புகள் எதும் ஏற்படவில்லை. இந்த எரிமலை வெடித்ததில் அதனுடைய சாம்பல் 20 கிலோமீட்டர் வரை பரவியுள்ளது.

இந்தியர் மீது எச்சில் துப்பிய வெளிநாட்டுக்காரர்?இந்தியன் செய்த தரமானச் செயல்!!

வெளிநாடுகளில் சம்பளம் அதிகமாக கிடைக்கப் பெறுவதால் இந்தியர்கள் இங்கிருந்து சென்று வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனர்.ஆனால் வெளிநாடு சென்று பணி புரியும் இந்தியர்கள் அங்கு எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதற்கு இந்த ஒரு வீடியோவை ஆதாரமாகும்.மேலும் ஒரு இந்தியரை அடித்தால் மற்றொரு இந்தியர் கொதித்து எழுவார்கள் என்பது நிரூபணமாகிவிட்டது. ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் மலேசியாவில் தோட்ட வேலை செய்து வருகின்றார்.அவருடன் வேலை செய்யும் சக தொழிலாளி ஒருவர் இந்தோனேசியாவை சேர்ந்தவர்.இந்தோனேசியாவை சேர்ந்தவரை வேலை சரியாக செய்யவில்லை என்று ஆந்திராவைச் சேர்ந்த … Read more

கொரோனா நோய்ப்பரவல் எப்போது உச்சத்திற்குச் செல்லும் கணிக்க முடியவில்லை – விஞ்ஞானிகள்

இந்தோனேசியாவில் COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100,000-ஐத் தாண்டியுள்ளது.  நோய்ப்பரவல் எப்போது உச்சத்திற்குச் செல்லும் என்பதைக் கணிக்க முடியாமல் இந்தோனேசிய விஞ்ஞானிகள் திணறுகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 1,525 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது, இந்தோனேசியாவில் 100,303 பேருக்கு கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 4,838ஆக உள்ளது. 58,173 பேர் உடல்நலம் தேறியுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 45 விழுக்காட்டினர் கிழக்கு ஜாவா, தலைநகர் ஜக்கர்த்தா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள். அந்த இரண்டு … Read more

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு இந்தோனேஷியா நாட்டின் மொலுக்காஸ் என்ற கடல்பகுதியில் நேற்றிரவு 9.47 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் பதட்டமடைந்தனர். இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 45 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், இது ரிக்டர் அளவில் 7.4-ஆகப் பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த அந்த பகுதி பொதுமக்கள், … Read more