எனக்கும் ரோகித் சர்மா போலவே விளையாட ஆசை

எனக்கும் ரோகித் சர்மா போலவே விளையாட ஆசை

டெஸ்ட் போட்டியில் முதன்முதலில் 10 ஆயிரம் ரன்களை கடந்த நபர் என்ற சாதனையைப் படைத்தவர் கவாஸ்கர்.  இவர் அதிக பந்துகளை சந்தித்து குறைவான ரன்கள் எடுப்பார். தடுப்பாட்டத்தில் வல்லவர். இந்நிலையிலும் நானும் ரோகித் சர்மா போன்று அதிரடியாக விளையாட விரும்பினேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடும் ஸ்டைலை பார்க்கும்போது, முதல் ஓவரில் இருந்தே டெஸ்ட் போட்டியிலும் அதிரடியாக விளையாட முடியும். நானும் அதுபோன்று … Read more

டெஸ்ட் போட்டி: பாகிஸ்தான் கடைசி நாளில் தாக்கு பிடிக்குமா?

டெஸ்ட் போட்டி: பாகிஸ்தான் கடைசி நாளில் தாக்கு பிடிக்குமா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more

வீட்டில் உடற்பயிற்சி செய்யும் பொழுது நாம் செய்யும் தவறுகள்!

வீட்டில் உடற்பயிற்சி செய்யும் பொழுது நாம் செய்யும் தவறுகள்!

வீட்டில் பயிற்சி செய்வதால் இப்படித்தான் செய்ய வேண்டும் என இல்லாமல் உங்கள் சௌகரியத்திற்கு அந்தப் பயிற்சியை செய்தால் அதற்கு பலன் இருக்காது. இந்த லாக்டவுன் நாட்களில் உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டதால் பலரும் வீடுகளிலேயே வீடியோக்களை பார்த்து உடற்பயிற்சிகளை செய்து வந்தனர். அதை உடற்பயிற்சி நிலையங்கள் திறந்த பின்னரும் பின்பற்றி வருகின்றனர். அப்படி வீட்டில் செய்வோர் பலரும் பொதுவாக செய்யும் சில தவறுகள் என்னென்ன பார்க்கலாம். வார்ம் அப் : உடற்பயிற்சி செய்யும் முன் வார்ம் அப் செய்வது … Read more

சேலத்தில் உயிருக்கு பயந்து காவல் நிலையத்தில் தஞ்சம் புகும் 2 காதல் ஜோடிகள்!

சேலத்தில் உயிருக்கு பயந்து காவல் நிலையத்தில் தஞ்சம் புகும் 2 காதல் ஜோடிகள்!

சேலம் அஸ்தம்பட்டி உடையார் காலனி பகுதியை சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன். அதிமுக கட்சி மாணவரணி பொறுப்பில் பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சின்னமுத்து மகள் சர்மிளா படிப்பு முடித்துவிட்டு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். முரளி கிருஷ்ணன் ஷர்மிளா இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.மேலும் ஷர்மிளா தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் முரளி கிருஷ்ணன் வீட்டில் இவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு உருவாகியது. இந்த நிலையில் ஷர்மிளா வீட்டில் வேறு ஒரு நபருடன் … Read more

செய்தியாளரை சரமாரியாகக் குத்தப்போவதாக கூறிய அதிபர்

செய்தியாளரை சரமாரியாகக் குத்தப்போவதாக கூறிய அதிபர்

செய்தியாளர் ஒருவரின் வாயில் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோனாரோ சரமாரியாகக் குத்தப்போவதாக எச்சரித்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. வாராவாரம் ஞாயிற்றுக் கிழமை தேவாலயத்திற்குச் செல்லும் அதிபரிடம் செய்தியாளர்கள் கேள்விகேட்பது வழக்கம். நேற்று செய்தியாளர் ஒருவர் அதிபரின் மனைவி மிஷெல் போல்சோனாரோ ஊழலில் ஈடுபட்டாரா என்று கேள்வி எழுப்பினார். அதைக் கேட்டுக் கடும் கோபம் கொண்ட போல்சோனாரோ செய்தியாளருக்கு மிரட்டல் விடுத்தார். அதைத்தொடர்ந்து அங்கிருந்த செய்தியாளர்கள் அதிபருக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

மகாத்மா காந்தியின் மூக்குக்கண்ணாடி இத்தனை ஆயிரம் டாலருக்கு விலை போனதா?

மகாத்மா காந்தியின் மூக்குக்கண்ணாடி இத்தனை ஆயிரம் டாலருக்கு விலை போனதா?

1920களில் தென்னாப்பிரிக்கப் பயணம் ஒன்றை மேற்கொண்டார் காந்தியடிகள்  அங்குச் சந்தித்தவரின் குடும்பத்தில் சில தலைமுறைகளாக அந்த மூக்குக்கண்ணாடி இருந்துள்ளது. மூக்குக்கண்ணாடி ஒன்று சுமார் 340,000 டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. கடைசியாக அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த வயதானவரும் அவரது மகளும் அதற்குச் சொந்தக்காரர்கள் ஆனார்கள். அவர்கள் அந்த மூக்குக்கண்ணாடியை ஏலம் எடுப்பவரிடம் விற்றார்கள். ஏலம் எடுப்பவரான திரு ஆண்ட்ரூ ஸ்டோ அந்த மூக்குக் கண்ணாடியின் மதிப்பை வயதானவரும் அவரது மகளும் அறியவில்லை எனக் கருதினார். அவர்கள் அந்த மூக்குக்கண்ணாடியைத் … Read more

ஆயிரம் ரிங்கிட் அபராதம் கட்டிய அத்தியாவசியப் பொருள் துறை அமைச்சர்

ஆயிரம் ரிங்கிட் அபராதம் கட்டிய அத்தியாவசியப் பொருள் துறை அமைச்சர்

மலேசியாவில், தனிமைப்படுத்தும் உத்தரவை மீறிய தோட்டத் துறை, அத்தியாவசியப் பொருள் துறை அமைச்சர் முகமது கைருதீன் அமான் ரஸாலி மீது காவல்துறை விசாரணை நடந்து வருவதாக, சுகாதாரத்துறைத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். கடந்த மாதம், துருக்கியிலிருந்து திரும்பிய அவர் தனிமைப்படுத்தும் கட்டாய உத்தரவை மீறியதால் அவருக்கு 1,000 ரிங்கிட் (330 வெள்ளி) அபராதம் விதிக்கப்பட்டது. அவருக்கு விதிக்கப்பட்டிருக்கக் கூடிய ஆக அதிகபட்சத் தண்டனை அவ்வளவுதானா என்று பொதுமக்கள் பலர் சமூக ஊடகங்களில் … Read more

உலகம் முழுவதும் இத்தனை கோடி பேருக்கு பரவியுள்ளதா?

உலகம் முழுவதும் இத்தனை கோடி பேருக்கு பரவியுள்ளதா?

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில்  கொரோனா வைரஸ்  பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. மேலும் இந்த வைரஸால் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியின் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே … Read more

வடகொரிய அதிபர் கோமா நிலையில் உள்ளாரா?

வடகொரிய அதிபர் கோமா நிலையில் உள்ளாரா?

36 வயதான கிம் ஜாங், இந்த ஆண்டில் இதுவரை சில முறை மட்டுமே, வெளியே ஊடகங்கள் முன்னிலையில் தென்பட்டார்.இதனால் கிம் ஜாங் மரணமடைந்துவிட்டார் என்பது போன்ற தகவலும், அவருக்கு மேற்கொண்ட இருதய அறுவைசிகிச்சை சிக்கலில் முடிந்தது எனவும் தகவல் பரப்பப்பட்டது.ஆனால், தலைநகரில் இருந்து சுமார் 30 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள சூச்சோன் பகுதியில் கிம் ஜாங் ஒரு தொழிற்சாலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு மொத்த வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வடகொரிய தலைவர் கிம் … Read more

ஹாலிவுட் படங்களில் வருவது போன்று கடலில் ஏற்பட்ட அபூர்வ காட்சி

ஹாலிவுட் படங்களில் வருவது போன்று கடலில் ஏற்பட்ட அபூர்வ காட்சி

லூசியானா, மிசிசிப்பி, அலபாமா மற்றும் மேற்கு புளோரிடா பகுதிகளில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லூசியானா மாகாணத்தின் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றிருந்தவர்கள் கடலில் பேரதிசயத்தைக் கண்டனர். அமெரிக்கா கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசய காட்சி வெளியாகி உள்ளது.  ஒரே நேரத்தில் அருகருகே 6 இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தது. ஹாலிவுட் படங்களில் வருவது போன்று இந்தக் காட்சி இருந்ததாக இதனைப் படம் பிடித்தவர்கள் … Read more