குழப்பத்தில் உள்ள பாஜக

குழப்பத்தில் உள்ள பாஜக

சிவசேனாவுடன் கூட்டணி சேர எந்த திட்டமும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.  பா.ஜ.க. தலைவர்களின் இந்த முரண்பட்ட கருத்துகள் குறித்து சிவசேனா விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் உங்கள் அரசியல் விளையாட்டை மகாராஷ்டிராவில் விளையாட முடியாது. எனவே மாநிலத்தில் உங்களது ஆட்சியை பற்றி ஆசைப்படவும் முடியாது. ஜே.பி.நட்டா மாநில பா.ஜ.க. சொந்த பலத்தில் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். மாநில நன்மைக்காக சிவசேனாவுடன் கைகோர்க்க பா.ஜ.க. தயாராக உள்ளது … Read more

அதிகாலை 2.50 மணியளவில் திடீரென நிலநடுக்கம் : மக்கள் அச்சம்

அதிகாலை 2.50 மணியளவில் திடீரென நிலநடுக்கம் : மக்கள் அச்சம்

பஞ்சாப் மாநிலத்தில் இன்று அதிகாலை 2.50 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தேசிய புவியியல் மையம் உறுதி செய்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.1 என்ற கணக்கில் பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலும் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் : ஒரே நாளில் 196 பேர் பலி

கொரோனா வைரஸ் : ஒரே நாளில் 196 பேர் பலி

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 636 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.  தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,98,909 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 196 பேர் பலி. இதனால் உயிர்ழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 343 ஆக  அதிகரித்து வருகிறது.  இதுவரை 2.59 லட்சத்துக்கும் மேற்பட்டோர்  குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

தொட்டாற் சிணுங்கியின் மருத்துவ குறிப்பு -தினம் ஒரு மூலிகை

தொட்டாற் சிணுங்கியின் மருத்துவ குறிப்பு -தினம் ஒரு மூலிகை

தொட்டால் சிணுங்கி அனைவரும் பார்த்திருப்போம் தொட்டால் சுருங்கி விடும் அந்த இலைக்கு மிகவும் மகத்தான மருத்துவக் பயன்பாடுகள் உள்ளன. தொட்டாற்சுருங்கி ,தொட்டா வாடி இலச்சகி, நமஸ்காரி ,காமவர்த்தினி என இதற்குப் பல பெயர்கள் உள்ளன. தொட்டால் சிணுங்கி புண்களுக்கு ஒரு அருமருந்தாக பயன்படுகிறது புண்கள் மறைய: தொட்டால் சிணுங்கி இலைகளை பறித்து சாறு எடுத்து அந்த சாற்றை புண்கள் மீது தடவி அதன் மேல் ஒரு வெற்றிலையை வைத்து கட்டிவர குழிப்புன் விரைவில் மறையும். வயிற்றுக் கடுப்பு … Read more

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 9 பேர் பலி

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 9 பேர் பலி

நேப்பாளத்தில் பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெள்ளமும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பெய்த கன மழை காரணமாக நரஹரிநாத் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் இறந்துள்ளனர். 9 பேரில் 7 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் 58 பேரைக் காணவில்லை என்றும் 87 பேர் காயமுற்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களில் அங்கு வெள்ளத்திற்கும் நிலச்சரிவுக்கும் 160 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் , தருமபுரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை … Read more

கொரோனா வைரஸின் கொடூரம் இன்று ஒரே நாளில் 92 பேர் பலி

கொரோனா வைரஸின் கொடூரம் இன்று ஒரே நாளில் 92 பேர் பலி

கொரோனா பாதிப்பில் கர்நாடக மாநிலம் இந்திய அளவில் 4-வது இடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,503 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,12,504 ஆக உள்ளது.  இன்று 92 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  2,155  ஆக அதிகரித்துள்ளது.  

ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு

ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்ந்தியாவில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு ஜூன் மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் வெளியிடப்பட்டு  வந்தன. இந்நிலையில் மூன்றாம் கட்ட தளர்வுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு: இரவு நேர ஊரடங்கு ரத்து … Read more

இங்கிலாந்து தொடரில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்

இங்கிலாந்து தொடரில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து அனைத்து விதன்மான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கிரிக்கெட்  போட்டியை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ஏற்பாடு செய்தன. இதற்க்கு சம்மதம் தெரிவித்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு சென்று கடந்த 8-ந்தேதி முதல் விளையாட தொடங்கியது. இதில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி 2-1 எனத் தொடரை கைப்பற்றியது. மேலும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் … Read more

போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

இங்கிலாந்தில் இன்னும் இரண்டு வாரங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகலாம் என இங்கிலாந்து பிரதமர் அஞ்சுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  உள் நாட்டிலும், வெளி நாடுகளிலும் ஆங்காங்கு கொரோனா தொற்று உருவாகி வருவது பிரதமரை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக மூத்த அரசு அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், கடந்த ஏழு நாட்களில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் எண்ணிக்கை, ஏப்ரலுக்குப் பிறகு அதிகம் பதிவான எண்ணிக்கை என கருதப்படுகிறது. கடந்த ஏழு நாட்களில் … Read more