இணையத்தை தெறிக்க விட்ட வலிமை மோஷன் போஸ்டர்!! ரசிகர்கள் ஆரவாரம்!

கோலிவுட்டில் முன்னணி நடிகராகவும், அனைவருக்கும் பிடித்த நடிகராகவும் வலம் வருபவர் தல அஜித் ஆவார். இவரது நடிப்பில் வலிமை என்ற திரைப்படம் அடுத்ததாக வெளியாக உள்ளது. மேலும், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி உள்ளது இந்த படம். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். வலிமை படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு தற்போது மீண்டும் ஹைதராபாத்தில் மிக வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக … Read more

காணவில்லை!! காணவில்லை!! கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம்!! போஸ்டரால் பரபரப்பு..!

சாத்தூர் அருகே மேலகாந்திநகர் பகுதியில் உள்ள அனைத்து ரௌடுகளையும் காணவில்லை அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்குட்பட்ட மேலகாந்திநகர் பகுதியில் பாதாள சாக்டை திட்டத்திற்காக சாலைகள் தோண்டபட்டு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த 2 மாத காலமாக நடைபெற்று வந்த இந்த பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அந்த பகுதியில் உள்ள சாலைகளில் தோண்டப்பட்ட குழிகள் அப்படியே விடப்பட்டுள்ளது. … Read more

தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த மாமனிதர்! சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் புகைப்படம்!

தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த மாமனிதர்! சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் புகைப்படம்! வழக்கமாக இரங்கல் கடிதம் அல்லது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் இறந்தவர்களுக்காக அவரது உறவினர்கள் அல்லது நண்பர்கள் வைப்பதுதான் வழக்கம்.ஆனால் சென்னையை சேர்ந்த 72 வயது மதிக்கத்தக்க கார் ரேலி ரேஸர் ஏஜ்ஜி கே.உமாமகேஷ் என்பவர்,தனக்கு தானே இரங்கல் கடிதம் எழுதிக்கொண்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதோடு நெட்டிசன்கள் மத்தியில் விவாத பொருளாகவும் தற்போது மாறியுள்ளது. கடந்த 16ஆம் தேதியன்று … Read more

பனானாஷால் நிறைந்த முரட்டு குத்து- 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! குதூகலத்தில் அடல்ட்ஸ்!

சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளிவந்த படம் தான் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இந்த அடல்ட் காமெடி படத்தில் முழுக்க முழுக்க முகம் சுளிக்கும் வசனங்கள் நிறைந்திருந்தாலும் சிறிதளவு கூட தயங்காமல், யாஷிகா ஆனந்த் மற்றும் கௌதம் கார்த்திக் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர். மேலும் இந்தப் படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபிசை நிறைத்தது. இந்த படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க நினைத்த சந்தோஷ்  பல ஹீரோக்களை அணுகியபோது, … Read more

பரபரப்பை கிளப்பும் நோ என்ட்ரி பட  போஸ்டர்! தலைகீழாக தொங்கும் ஆண்ட்ரியா!

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் தமிழ் சினிமாவில் மிகவும் ஈர்க்கப்படும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அசால்டாக நடிப்பார். இவர் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மற்ற நடிகைகளைப் போல் இல்லாமல் சற்று வேறுபட்டே இருக்கும்.மேலும் மக்களின் மனதில் இடம் பிடித்ததற்கு  இது ஒரு பெரிய காரணமாகும்  ஆண்ட்ரியா தற்போது சோலோ ஹீரோயினாக நடிக்கயிருக்கும் திரைப்படம் நோ என்ட்ரி.இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. ஏனெனில் இதில் … Read more

மாஸ்டரை ஹெட்மாஸ்டர் ஆக்கிவிடாதீர்கள்!சர்ச்சையைக் கிளப்பிய விஜய்ரசிகரின் மற்றொரு போஸ்டர்!

மாஸ்டரை ஹெட்மாஸ்டர் ஆக்கிவிடாதீர்கள்!சர்ச்சையைக் கிளப்பிய விஜய்ரசிகரின் மற்றொரு போஸ்டர்! புதுக்கோட்டையைச் சேர்ந்த விஜய் ரசிகரான ஸ்டாலின் மாஸ்கோ என்பவர் அடித்து ஒட்டியுள்ள போஸ்டர் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விஜய் … Read more

தமிழ் கடவுளை அவமதிக்கும் விதமாக காக்டெய்ல் திரைப்பட போஸ்டர் வெளியீடு!

தமிழ் கடவுளை அவமதிக்கும் விதமாக காக்டெய்ல் திரைப்பட போஸ்டர் வெளியீடு! சமீபத்தில் வெளியான காக்டெய்ல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சரச்சையை தூண்டும் விதமாக உள்ளது. அதில் தமிழ் கடவுள் முருகன் வேடத்தில் நடிகர் யோகி பாபு முருகனை போல் காட்சி தருவதாக போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களிடையே காக்டெய்ல் பட போஸ்டர் ஆரம்பத்திலேயே சர்ச்சை உண்டாக்கியது. விமர்சனங்களின் அடிப்படையில் இந்த போஸ்டர் குறித்து காக்டெய்ல் திரைப்படத்தின் இயக்குனர் முருகன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: … Read more

அதிமுகவிற்கு அதிக ஓட்டுக்களை வாங்கிக் கொடுத்த திமுகவினர்! நன்றி தெரிவித்து போஸ்டர்களை ஒட்டியதால் உடன்பிறப்புகள் அதிர்ச்சி

அதிமுகவிற்கு அதிக ஓட்டுக்களை வாங்கிக் கொடுத்த திமுகவினர்! நன்றி தெரிவித்து போஸ்டர்களை ஒட்டியதால் உடன்பிறப்புகள் அதிர்ச்சி திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில், திமுக ஆதரவுடன் களமிறங்கிய காங்கிரஸ், அதன் சார்பாகப் போட்டியிட்ட சென்னையில் இருந்தாலும் மண்ணின் மைந்தன் என்று சொல்லி தனது செல்வாக்கு மூலம் போட்டியிட்ட ரூபி மனோகரன் அவர்கள் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து களம் இறங்கிய அ.தி.மு.க வேட்பாளரான ரெட்டியார்பட்டி நாராயணன் 30 ஆயிரத்துக்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் … Read more

திமுகவில் யார்‌ உழைத்தது யார்‌ பிழைப்பது! பொன்முடிக்கு எதிராக கொந்தளிப்பை வெளிப்படுத்திய வன்னியர்கள்

திமுகவில் யார்‌ உழைத்தது யார்‌ பிழைத்தது! பொன்முடிக்கு எதிராக கொந்தளிப்பை வெளிப்படுத்திய வன்னியர்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது, திமுகவிற்கும் அதிமுகவிற்கும் நேரடி மோதல் உச்சத்தில் இருக்கிறது, இரண்டு கட்சிகளுமே உள்ளாட்சி தேர்தலில் தைரியமாக களம் இறங்குவதற்கு உந்துசக்தியாக இடைதேர்தல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பொருத்தவரை பாட்டாளி மக்கள் கட்சியை விட்டு தர முடியாது, ஏனென்றால் வட மாவட்டங்களில் பாமகவின் செல்வாக்குமிக்க தொகுதிகளில் விக்கிரவாண்டியம் ஒன்று, அதற்கு முக்கிய காரணம் வன்னியர்கள் பெரும்பான்மையாக … Read more