ஆஸ்கர் விருதுக்கு செல்லும் படத்தில் நடித்த சிறுவன் மரணம்… சோகத்தில் சினிமா ரசிகர்கள்!

0
260

ஆஸ்கர் விருதுக்கு செல்லும் படத்தில் நடித்த சிறுவன் மரணம்… சோகத்தில் சினிமா ரசிகர்கள்!

இந்தியா சார்பில் இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவுக்கு செல்லோ ஷோ (தி லாஸ்ட் ஷோ) என்ற படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சினிமா துறையில் வழங்கப்படும் விருதுகளில் மிகவும் பரவலாக அறியப்படுவதும் கௌரவமான ஒன்றாகவும் கருதப்படும் விருது ஆஸ்கர் விருதுகள். அமெரிக்க படங்களுக்காக வழங்கப்படும் இந்த விருதில் வெளிநாட்டு படங்கள் என்ற பிரிவில் மற்ற நாடுகளின் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

ஆனால் இந்த விருதை ஒருமுறைக் கூட இந்திய படங்கள் வாங்கவில்லை. இந்தியாவின் சார்பாக சென்ற லகான் திரைப்படம் மட்டும் கடைசி சுற்று வரை முன்னேறியது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியா சார்பாக ஆர் ஆர் ஆர் அல்லது காஷ்மீர் பைல்ஸ் ஆகிய திரைப்படத்தில் ஏதாவது ஒன்று ஆஸ்கருக்கு அனுப்பப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் அனைத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி “செல்லோ ஷோ” என்ற குஜராத்தி படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சினிமாத்துறையில் பிலிம்களில் இருந்து டிஜிட்டலுக்கு மாறிய போது ஏற்பட்ட  இழப்புகளை சொல்லும் படமாக செல்லோ ஷோ உருவாகியுள்ளது. இன்னும் இந்த படம் இந்தியாவில் ரிலீஸாக வில்லை. இந்த வார இறுதியில் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்த சிறுவன் ராகுல் கோலி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சில மாதங்களாகவே சிகிச்சையில் இருந்த அவர் இப்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Previous articleசென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு எடப்பாடியை நெருங்குகிறதா ஆபத்து?
Next articleஉக்ரைன் விவகாரம்! ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா ஏன் தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here