தமிழகத்திற்கு பொங்கலுக்கு பிறகு இது அவசியமில்லை! சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி!

0
93

தமிழ்நாட்டின் நோய்த்தொற்று தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, நேற்று முன்தினம் 13 ஆயிரத்து 990 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு இருந்தது. அது நேற்றைய தினம் 15 ஆயிரத்து 379 ஆக அதிகரித்தது. தற்சமயம் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்படும் எனவும், முழு ஊரடங்கு அமல்படுத்தப் படலாம் என்றும், எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருக்கின்ற சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இதனை அறவே மறுத்திருக்கிறார். தமிழகத்தில் முழு ஊரடங்கு அவசியமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் பொங்கலுக்கு பின்னர் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுமா? இது குறித்து தமிழக அரசிடம் சுகாதாரத் துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டு உள்ளதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினார்கள் இதற்கு பதில் தெரிவித்த அவர் கூறியதாவது,

தமிழ்நாட்டில் பொங்கலுக்கு பின்னர் முழு ஊரடங்கு அமல்படுத்துவதற்கு எந்தவிதமான அவசியமும் கிடையாது. தொடர்ச்சியாக ஊரடங்கு அமல் படுத்தி பொருளாதார பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதிலும், பொது மக்களின் வாழ்வாதாரம் எந்த விதத்திலும் பாதிக்கப்பட கூடாது என்பதிலும், முதலமைச்சர் உறுதியாக உள்ளார்.

அதன் காரணமாகத்தான் தமிழகத்தில் கொஞ்சம், கொஞ்சமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. ஆகவே பொதுமக்கள் நோய்த்தொற்று விதிமுறைகளை முறையாக கடைபிடித்தால் எதிர்காலத்தில் ஊரடங்கை நீட்டிக்கவும், கடுமையாக்கவும், வேகப்படுத்தவும் எந்தவிதமான அவசியம் இருக்காது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு முன்னதாக சென்னை திருவான்மியூரில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பில் நோய்தொற்று பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருக்கின்ற நபர்களுக்கு ஆக்சிஜன் அளவை சரிபார்த்துக்கொள்ள பால்ஸ் எக்ஸ் மீட்டர்களை சுப்பிரமணியன் வழங்கினார். அதோடு முகக் கவசங்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை உண்டாக்கி தொலைபேசி ஆலோசனை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார் என்று சொல்லப்படுகிறது.

இதனையடுத்து வீடுகளில் தனிமைப் படுத்தப் பட்டிருக்கின்றன அவர்களை தொலைபேசியில் அழைத்து அவர்களின் உடல் நலம் தொடர்பாக விசாரணை செய்தார் இதனைத் தொடர்ந்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்ற நபர்களை தொலைபேசியில் அழைத்து அவர்களுடைய உடல் நிலை தொடர்பாக விசாரித்தார்.

இதற்குப் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் தெரிவித்ததாவது திருவான்மியூர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 10க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்ட சூழ்நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆக்சிஜன் அளவு 92 கீழே இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை மேற்கொள்ளவும், 92 இருக்கும் மேலே ஆக்சிஜன் அளவு இருப்பவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும், மருத்துவர்கள் மூலமாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.