தாடி மற்றும் மீசை அடர்த்தியாக வளர இதை மட்டும் செய்தால் போதும்!!

0
30
#image_title

தாடி மற்றும் மீசை அடர்த்தியாக வளர இதை மட்டும் செய்தால் போதும்!!

ஆண்களுக்கு தாடி மற்றும் மீசை தான் அழகு என்ற எண்ணமும் பரவலாக காணப்படுகிறது. அதிலும் நன்கு அடர்ந்த தாடி மற்றும் மீசை வைத்துள்ள ஆண்களை தான் பெண்கள் அதிகம் ரசிக்கிறார்கள்.

ஆனால் இன்றைய இளையத் தலைமுறையினருக்கு (ஆண்கள்) தாடி,மீசை முடி அடர்த்தியாக வளர்வதில்லை.இதற்கு வாழ்க்கை முறை,ஜீன் அமைப்பு,உணவுமுறை மாற்றம் உள்ளிட்டவை காரணங்களாக சொல்லப்படுகிறது.இதற்கு இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை வைத்து ரெமிடி செய்து அதனை முறையாக பயன்படுத்தி வந்தால் நிச்சயம் நல்ல பலன் பெற முடியும்.

தேவையான பொருட்கள்:-

*பெரிய வெங்காயச் சாறு – தேவையான அளவு

*தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி

*விளக்கெண்ணெய் – 1 தேக்கரண்டி

*ஆலிவ் எண்ணெய் – 1 தேக்கரண்டி

*வைட்டமின் இ மாத்திரை – 1

செய்முறை:-

ஒரு பவுலில் 1தேவையான அளவு வெங்காயச் சாறு எடுத்துக் கொள்ளவும்.பின்னர் அதில் 1 தேக்கரண்டி சுத்தமான தேங்காய் எண்ணெய்,1 தேக்கரண்டி விளக்கெண்ணெய்,1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் வைட்டமின் இ மாத்திரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இந்த எண்ணெயை இரவு தூங்க போவதற்கு முன் தாடி மற்றும் மீசை முடிகளின் மேல் நன்கு அப்ளை செய்து கொண்டு படுக்கவும்.

மறுநாள் காலையில் எழுந்து முகத்தை நன்கு கழுவவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் 10 நாட்களில் தாடி மீசை வளரத் தொடங்கும்.

மற்றொரு தீர்வு:-

முதலில் கருவேப்பிலையை காயவைத்து பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும்.பிறகு ஒரு பவுல் எடுத்து தயார் செய்து வைத்துள்ள கருவேப்பிலை பொடி 1 தேக்கரண்டி,தேங்காய் எண்ணெய் 3 தேக்கரண்டி,விளக்கெண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து ஒரு ஸ்பூன் கொண்டு நன்கு கலக்க வேண்டும்.

இந்த ரெமிடியை பயன்படுத்துவதற்கு முன்னதாக ஒரு வாரம் தொடர்ந்து தாடி மற்றும் மீசையை சுத்தமாக சேவ் செய்ய வேண்டும்.இதனை அடுத்து ஒரு வாரம் கழித்து சூடு நீரில் நன்கு ஆவி பிடிக்க வேண்டும்.

பிறகு இந்த ரெமிடியை செய்து மீசை,தாடி பகுதியில் தடவி குறைந்தது 1 மணி நேரம் வைத்திருந்து பிறகு முகத்திற்கு ஏதாவது ஒரு பேஸ் வாஷ் பயன்படுத்தி நன்கு கழுவ வேண்டும்.இவ்வாறு செய்து வந்தோம் என்றால் கூடிய விரைவில் பூனை மீசை மற்றும் தாடி கருமை நிறத்தில் அடர்த்தியாக வளரும்.