மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்த கபடி வீரர்!

0
59

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இருக்கின்ற காடம்புலியூர் பெரிய குரங்கணி முருகன் கோவில் தெருவில் வசித்து வருபவர் விமல்ராஜ் 21 வயது மதிக்கத்தக்க இவர் கபடி வீரர் ஆவார். இவர் சேலம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2ம் வருடம் படித்து வருகிறார். இந்த நிலையில், சேலத்தில் உள்ள கபடி அகாடமியில் கபடி பயிற்சி பெற்று வந்தார் என சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், நேற்று இரவு பண்ருட்டியையடுத்த முத்தாண்டி குப்பத்தில் நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் விமல்ராஜ் பங்கேற்றுக் கொண்டு விளையாடிய போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார் இதனைத் தொடர்ந்து கீழ குப்பம் கிராம எதிரணியைச் சார்ந்த வீரர் விமல் ராஜை பிடிக்க முயற்சித்த போது அவரது மார்பில் அடிபட்டு சுயநினைவின்றி கிடைத்தார் என்று சொல்லப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற வீரர்கள் உடனடியாக அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்கள்.

இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தாண்டி குப்பம் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் விமல்ராஜ் உடலை மீட்டி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அதன் பிறகு இது தொடர்பாக முத்தாண்டி குப்பம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.