20 நாட்கள் வரை கெட்டு போகாத “தக்காளி தொக்கு” சுவையாக செய்யும் முறை!!

0
27
#image_title

20 நாட்கள் வரை கெட்டு போகாத “தக்காளி தொக்கு” சுவையாக செய்யும் முறை!!

நம்மில் பலருக்கு தினமும் சமைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று.இன்றைய காலத்தில் பெண்கள் அனைவரும் வேலைக்கு செல்ல தொடங்கி விட்டதால் அதிகளவு ஹோட்டல் உணவு வீட்டை எட்டி பார்க்க ஆரமித்து விட்டது.அடிக்கடி ஹோட்டல் உணவுகளை ருசிப்பதால் உடலுக்கு பல கேடு விளைவிக்கும் பாதிப்புகள் உருவாக ஆரமித்து விடும்.

பலர் நேரம் இல்லாததால் கடைகளில் கிடைக்கும் ரெடிமேடு உணவு பாக்கெட்களை வாங்கி வந்து உடனடியாக சமைத்து விடுகின்றனர்.இந்த வகை உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதனால் அவர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி விடுகிறார்கள்.அப்போ குறைவான நேரத்தில் வீட்டு முறைப்படி எப்படி சமைப்பது என்ற கேள்வி உங்களுக்குள் எழும்.அதற்கு பல எளிய சமையல்கள் இருக்கிறது.

மேலும் ஊறுகாய்,தொக்கு போன்ற வகைகளை செய்து வைத்து கொண்டால் போதும்.சாதம் மட்டும் செய்து அவற்றில் தொக்கு அல்லது ஊறுகாய் கலந்து எளிதான முறையில் சமையலை முடித்து கொள்ளலாம்.இந்த தொக்கு,மற்றும் ஊறுகாய் வகைகளை விடுமுறை நாட்களில் செய்து வைத்து கொண்டால் கிட்டத்தட்ட 2 வாரங்கள் வரை பயன்படுத்தலாம்.தக்காளி ஊறுகாய்,தக்காளி தொக்கு,இஞ்சி ஊறுகாய்,புளி தொக்கு,பூண்டு,எலுமிச்சை,மாங்கா உள்ளிட்ட ஊறுகாய் வகைகளை முன்கூட்டியே தயார் செய்து வைத்து விட்டோம் என்றால் தினமும் ஒரு வெரைட்டி சாதம் செய்து சாப்பிட முடியும்.

அந்த வகையில் நம் அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்றான தக்காளி வைத்து சுவையான தொக்கு செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.செய்து பார்த்து பயன் பெறுங்கள்.

தேவையான பொருட்கள்:-

*தக்காளி – 10 முதல் 15 வரை

*காய்ந்த மிளகாய் – 8

*இஞ்சி.பூண்டு பேஸ்ட் – 1 1/2 தேக்கரண்டி

*தூள் உப்பு – தேவையான அளவு

*நல்லெண்ணெய் – 5 தேக்கரண்டி

*கடுகு – 1/2 தேக்கரண்டி

*மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி

செய்முறை:-

1.தக்காளி பழம் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

2.அடுப்பில் கடாய் வைத்து அதில் 5 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் கடுகு கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.

3.பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் கிள்ளி வைத்துள்ள வர மிளகாயை சேர்த்து வதக்கவும்.

4.அவை நன்கு வதங்கிய பின் இஞ்சி,பூண்டு பேஸ்ட் மற்றும் தேவையான அளவு உப்பு,மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விடவும்.

5.பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து பச்சை வாசனை நன்கு வதக்கி எடுக்கவும்.

6.எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக விடவும்.பின்னர் அடுப்பை அணைத்து அவை ஆறிய பின்னர் ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு முடி விடவும்.இந்த தக்காளி தொக்கு 20 நாட்கள் வரை கெடாது.இந்த தொக்கு சப்பாத்தி,பூரி,இட்லி,தோசை,சாதம் உள்ளிட்டவைகளுக்கு சிறந்த சைடிஷ் ஆகும்.