செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: தமிழக அமைச்சர்

0
218

செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: தமிழக அமைச்சர்

செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும் போல் உள்ளதாக தமிழக அமைச்சர் பாஸ்கரன் ஆவேசமாக பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக கதர்த்துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு மடிக்கணினிகளை வழங்கினார். அதன்பின்னர் அவர் பேசியதாவது:

செல்போன்களால் தான் பல இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்வதாகவும், செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும் போல் உள்ளதாகவும், மாணவர்கள் மடிக்கணினியை சரியான தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்

மேலும் செல்போன் நல்ல நோக்கத்திற்காக கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றை பல இளைஞர்கள் தவறாக பயன்படுத்தி வருவதாகவும் செல்போனால்தான் மாணவர்களிடையே படிப்பில் ஆர்வம் குறைந்து வருவதாகவும் அமைச்சர் பாஸ்கரன் ஆதங்கத்துடன் கூறினார்

அமைச்சரின் இந்த பேச்சு ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Previous articleசூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சந்தானம்!
Next articleமகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here