ஆஸ்கர் நாயகனுக்கு இன்று 55 வது பிறந்தநாள்!

0
78
Today is the 55th birthday of Oscar Man!
Today is the 55th birthday of Oscar Man!

ஆஸ்கர் நாயகனுக்கு இன்று 55 வது பிறந்தநாள்!

உலக இசை சாம்ராஜ்யங்களை தன் விரல்களால் இசைத்து பார்த்த ஒரு தமிழர்.
அவர் இன்று தனது 55 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

உலக தமிழ் மக்கள் சார்பாக அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வதில் New4 பெருமை கொள்கிறது.

A.R.ரஹ்மான் இன் இளமை காலங்கள் அவ்ளோ எளிதாய் அமையவில்லை. அவர் பியானோ வாசிக்காத இசையமைப்பாளர்களே கிடையாது. இசை மீது அவர் கொண்ட பற்றால் தனக்கான இசையை தனக்கான அங்கீகாரத்தை தேட இரவு பகல் பாராமல் உழைத்தார்.

இரண்டு இசை ஜாம்பவான்கள் மத்தியில் இசைப்புயலாய் தமிழ் திரை இசைக்குள் நுழைந்தவர்.

ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு இசை கோர்வைக்கும் அதிகமாக மெனக்கெட்டார். புது புது இசை கோர்வைகள் மூலம் உலக மக்களை தன் பக்கம் திரும்ப செய்தார்.

இசையை அவர் கையாளும் விதம் புதுமையாக இருந்ததால் ஒட்டு மொத்த தமிழ் திரை ஜாம்பான்களும் ரஹ்மானை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர்.
மேற்கத்திய இசை அமைக்கும் இவரால் கிராமத்து இசையை கொடுக்க முடியாது என்று சொன்னவர்களுக்கு தந்து கிழக்கு சீமையிலே படம் மூலம் பதிலடி கொடுத்தவர்.

ஏன் நம் பாரதிராஜா பாலசந்தர் மணிரத்னம் போன்ற சாகாதபங்களை கூட பிரமிக்க வைத்தவர்.
என்னதான் இசை அமைக்க அவர் அதிக நேரங்கள் எடுத்துக்கொண்டாலும் அவர் இசைக்காக காத்திருக்கும் தருணங்கள் அவர் இசையை கேட்டதும் அடையாளம் தெரியாத தாலாட்டாக மாறிவிடும்.
கணினியில் தான் இசை அமைக்கிறார் என்ற குற்றச்சாற்று எழுந்த போது,அதை மேடையிலேயே இசையமைத்து காட்டி பிரமிக்க வைத்தவர்.
பாலிவுட் இசையமைப்பாளர்கள் இவர் இசையமைத்த பாடல்களை வெட்கமே இல்லாமல் தனது பெயரை சூட்டிக்கொண்டபோதும் அதை கண்டு கொள்ளாதவர். காரணம் பிறரின் உழைப்பை காப்பியடித்து பெற்று கொள்ளும் பெயர் நிரந்தரமில்லை என்பதை உணர்ந்தவர்.

மேற்கத்திய இசை மட்டுமின்றி, கர்நாட்டிக்,சுபி,கிளாசிக், fusion என அனைத்து இசையிலும் புதுமைகளை புகுத்தி பல இளைஞர்களின் இசை கனவிற்கு ஆசானாக இருந்தவர்.

இன்றும் அவர் இசைக்காக காத்திருக்கும் இளம் இயக்குனர்கள் பல இருக்கிறார்கள். வருடங்கள் பல கடந்தும் இன்றும் அவரின் இசைக்கு மயங்காதரவர்கள் இல்லை.

பாடல்களில் உணர்வுகளை கடத்தும் வித்தை தெரிந்தவர். அவரின் பாடல்களுக்காகவே ஓடிய படங்கள் நெறைய இருக்கிறது.

ஒரு விருது வாங்கினால் தலை கால் புரியாதவர்கள் மத்தியில் பல விருதுகளை அள்ளிக்குவித்தவர். தமிழ் திரை உலகிற்கு ஆஸ்கார் கிராமி பாஃதா போன்ற சர்வ தேச விருதுகள் மூலம் மகுடம் சூட்டியவர்.

சிகரங்கள் பல தொட்டாலும் இன்றும் தனது வெற்றியை தலைக்கு மேல் ஏற்றிக்கொள்ளாதவர். எல்லா புகழும் இறைவனுக்கே என்று உலக மேடைகளில் தமிழை உச்சரித்த ஒருவர் நம் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான்.