இந்து மதத்தை அவமதித்த உதயநிதி ஸ்டாலின்! தேர்தலுக்காக திமுக போட்ட இரட்டை வேடம்-தலைவர்கள் கண்டனம்

0
61
Udhayanidhi
Udhayanidhi

இந்து மதத்தை அவமதித்த உதயநிதி ஸ்டாலின்! தேர்தலுக்காக திமுக போட்ட இரட்டை வேடம்-தலைவர்கள் கண்டனம்

ஆரம்ப காலத்திலிருந்தே திமுக பெரியார் கொள்கைகளை பின்பற்றுகிறோம் என தொடர்ந்து கடவுள் மறுப்பை தீவிரமாக செயல்படுத்தி வந்தனர்.இந்நிலையில் ஸ்டாலின் கட்சியில் ஆதிக்கம் செலுத்தியது முதல் திமுகவின் இரட்டை நிலைப்பாடு அவ்வப்போது வெளியில் தெரிய வந்தது. அதாவது மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலோனோர் கடவுள் நம்பிக்கை உடையவர் என்பது பொது மக்களுக்கு தெரிய வந்தது.அதுவும் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கோவிலில் வழிபாடும் புகைப்படம் அடிக்கடி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை எதிர்த்து பல்வேறு விதங்களில் விமர்சனங்கள் எழுந்து வந்தது.அதாவது குடும்பத்திற்கு ஒரு கொள்கை கட்சிக்கு ஒரு கொள்கையா என பலரும் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் வெளிப்படையாகவே இந்து மதத்தை எதிர்க்கவில்லை என பேச ஆரம்பித்தார்.இந்து மதத்தினரை கவரும் வகையிலும் அவருடைய செயல்பாடுகள் இருந்தது.வாக்குக்காக அவர் இதை செய்தாலும் பொது மக்கள் மத்தியில் இதற்கு ஓரளவு ஆதரவு இருந்தது.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட பூமி பூஜை நிகழ்வில் செருப்பை அணிந்து கொண்டு வந்தது இந்து மத ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் புதிய அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்காக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக பூமி பூஜை நடத்தப்பட்டது.இந்த விழாவில் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி கலந்து கொண்டார்.அப்போது அவரும் உடன் வந்தவர்களும் செருப்பை அணிந்து கலந்து கொண்டது அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு எதிராக பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா கூறியதாவது,தங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் பூமி பூஜை நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்க்கலாம். ஆனால் கடவுளை அவமதிப்பது போல காலில் செருப்பு அணிந்து கொண்டு பூஜை செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார் இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, திமுக தலைவர் கருணாநிதி சமாதியில் காலில் செருப்பு அணிந்து கொண்டு மரியாதை செலுத்துவார் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்? தேர்தலுக்கு முன்பு நாத்திக வேடம் ஆட்சிக்கு வந்தபின் நாத்திக ஆத்திக வேடம்!? வாழ்க பகுத்தறிவு?? ஹிந்து மத அவமதிப்பு மன்னிப்பு கேட்கணும்! என்று கூறியுள்ளார்.

தேர்தலுக்கு முன், ‘நான் கடவுள் நம்பிக்கை அற்றவன்’ என்று பேசிய உதயநிதி, காலில் செருப்பு அணிந்து, ஹிந்து சமய கடவுள் படங்களை அவமதிக்கும் வகையில் நடந்து உள்ளார் என்று பலரும் இதை எதிர்த்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.