மாஸ்க் போட அட்வைஸ் பண்ணும் நடிகர் வடிவேலு ! முதல்வரை சந்தித்து நிதி வழங்கினார்!

0
90
Vadivelu, the actor who gives advice to put on a mask! First met and funded!
Vadivelu, the actor who gives advice to put on a mask! First met and funded!

மாஸ்க் போட அட்வைஸ் பண்ணும் நடிகர் வடிவேலு ! முதல்வரை சந்தித்து நிதி வழங்கினார்!

நடிகர் வடிவேலு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 5 லட்சம் கொரோனா காசோலையை வழங்கினார். அதன்பின் நிருபர்களைச் சந்தித்த அவர் கூறும்போது இவ்வாறு கூறினார். முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். முதல் அமைச்சர் ஸ்டாலினை சந்தித்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

மிகவும் எளிமையாக இருக்கிறார். குடும்பத்தில் ஒரு நபராக நினைத்து என்னிடம் பேசினார். மேலும் கொரோனா நிதிக்காக நன்கொடை கொடுத்துள்ளேன். ஆட்சிக்கு வந்த இரண்டு மாதத்தில் உலகமே உற்றுப் பார்க்கும் வகையில் கோரோனாவை கட்டுப்படுத்தி உள்ளார்.

இது மக்களுக்கு பொற்காலம் என்றும், கருணாநிதி இருந்திருந்தால் இந்த ஆட்சியை கண்டு பெருமை அடைந்திருப்பார். தமிழக முதல்வரே தெருத்தெருவாக சென்று மக்கள் தடுப்பூசி போட முகாம் அமைத்து வீட்டில் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார். யார் மனதையும் புண்படுத்தாமல் எல்லா திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார் என்று முதல்வருக்கு புகழாரம் சூட்டினார். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், என்று தனது படத்தின் காமெடி காட்சியை சுட்டிக்காட்டி வலியுறுத்தினார்.

மாஸ்க் போடுங்க அப்பா என்றால், நாங்க எல்லாம் தேக்கு அண்ணே, போ அண்ணே, போ அண்ணே என்று சொல்றான். யப்பா தேக்குன்னாலும் கொரோனா அரிச்சிடும்பா, என்றார். நான் ரெண்டு ஊசி போட்டுட்டேன். இன்னும் 40 ஊசி போடச் சொன்னாலும் நான் போடுவேன். ஏன்னா எனக்கு இன்னும் பீதியா இருக்கு. அதனால மக்கள் முன் வந்து ஊசி போடணும். அதேபோல தொடர்ந்து சினிமாவில் இருந்து சீரியல் வந்துச்சு,அதற்கடுத்து ஓடிடி என அடுத்த டெக்னாலஜிக்கு போயிட்டு தானே இருக்கு. இது இன்னொரு குட்டி போடும். அது இன்னொரு குட்டி போடும் அப்படியே போய்க் கொண்டேதான் இருக்கும்.

காலத்திற்கு தகுந்த மாதிரி நாம போக வேண்டியதுதான் எனவும் கூறினார். கொங்குநாடு சர்ச்சை குறித்தும் விமர்சித்தார். ராம்நாடுனு ஒன்று இருக்கு. ஒரத்த நாடுனு ஒன்னு இருக்கு. இப்படி நிறைய போய்க்கிட்டே இருக்கு நல்லா இருக்குற தமிழ்நாட்டில் எதுக்கு பிரிச்சுகிட்டு, நாடு நாடு என தனித்தனியாக போய்விட்டால் என்னாவது, நான் அரசியல் பேசவில்லை. இதெல்லாம் பேசும்போது தல சுத்துது என்று கூறினார். மேலும் தொடர்ந்து படங்களில் நடிப்பீர்களா என்று கேட்ட கேள்விக்கு நல்லதே நடக்கும் என்று மறைமுகமாக நடிகர் வடிவேலு குறிப்பிட்டார்.