கிழித்து தொங்க விட்ட வைகோ…! மகிழ்ச்சியில் ஆளும் தரப்பு…!

0
73

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார் வளைகுடாவில் மீன் பிடிக்கப் போன ராமேஸ்வர மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல் கண்டனத்திற்கு உரியது.
என்று தெரிவித்திருக்கிறார்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளில் கற்களை வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். ஒரு மீனவரின் மண்டை உடைந்து இருக்கிறது. பலத்த காயம் அடைந்து இருக்கிறார்கள்.

மீன் பிடிக்கும் பொருட்டு தமிழக மீனவர்கள் விரித்திருந்த நூற்றுக்கணக்கான வலைகளையும் இலங்கை கடற்படை அறுத்து எரிந்து அட்டூழியம் செய்து இருக்கின்றது.

நேற்று இன்று அல்ல சுமார் 40 வருடங்களாகவே, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள். 600க்கும் மேலான தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்று இருக்கிறார்கள்.

பல மீனவர்களை கைது செய்து, பல மாதங்கள் சிறையில் வைத்து, துன்புறுத்தி இருக்கிறார்கள், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து இருக்கிறார்கள், ஒரு பெரும் தொகையை அபராதமாக வாங்கிக் கொண்டு பின்னர் விடுவித்து இருக்கிறார்கள், அமெரிக்காவின் குடிமகன் ஒருவனை தாக்கினால் கூட உடனே அந்நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும்.

ஆனால், தமிழக மீனவர்கள் சுமார் 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட பின்னரும் கூட இலங்கை தூதரை இந்தியா அழைத்து எச்சரிக்கை கூட செய்யாமல் இருப்பது வேதனைக்குரிய ஒரு செயல்.

இழப்பீடு கூட பெற்றுத் தந்தது இல்லை. இப்பிரச்சனைக்கு அடிப்படை காரணமாக விளங்கி வருவது கச்சத்தீவை அந்த நாட்டிடம் தாரை வார்த்தது தான். எனவே கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று என்று தமிழக மக்கள் மற்றும் தமிழக மீனவர்கள் ஆகியோர் ஒருமித்த குரல் எழுப்புகிறார்கள். அவர்கள் எழுப்பும் குரலினை மத்திய அரசு காதில் போட்டுக் கொள்வதில்லை. தமிழக மீனவர்களின் பாதுகாப்பு கருதி கச்சத்தீவை மீட்பதற்கான, உரிய நடவடிக்கையை மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். என தெரிவித்திருக்கிறார்.