அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில்!

0
132

ஜலகண்டீஸ்வரர் வீற்றிருக்கும் வேலூர் என்ற கிராமமானது வேலங்காடு என்ற புராண பெயரை கொண்டது. இந்த கோவில் சுமார் 1500 வருடங்கள் பழமையான கோவிலாக கருதப்படுகிறது.

இந்த தளத்தில் இருக்கின்ற லிங்கம் சப்தரிஷிகளில் ஒருவரான அத்திரி என்பவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்த சிவலிங்கத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இங்கே அருள் பாலைக்கும் சிவபெருமானுக்கு ஜலகண்டேஸ்வரர் என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்தக் கோவிலில் விஷ்ணு மகாலட்சுமி தாயாருடனும், பிரம்மா சரஸ்வதி தேவியிடனும், சிவபெருமான் பார்வதி தேதியுடனும், சேர்ந்து காட்சி தருகிறார்கள். மும்மூர்த்திகளையும் முப்பெரும் தேவிகளையும் ஒன்றாக தரிசனம் பெறும் பாக்கியத்தை இந்த கோவிலுக்கு சென்றால் அடையாளம் என்று சொல்லப்படுகிறது.

இந்தக் கோவிலில் இருக்கும் கிணற்றில் இருக்கின்ற நீரானது கங்கை நதிக்கு இணையாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஈஸ்வரலிங்கம் லேசான கூம்பு வடிவத்தில் காணப்படுகிறது இந்த லிங்கத்தின் பின்புறத்தில் காலபைரவர் காட்சி தருகிறார்.

கங்கை சிவன் பைரவர் உள்ளிட்ட மூவரையும் ஒன்றாக தரிசிக்கும் மிகவும் அரிதான காட்சியும் இங்கு தான் காணப்படுகிறது. இவர்களை வழிபடுவதன் மூலமாக காசி விஸ்வநாதரை வழிபட்ட புண்ணியம் கிடைத்ததாக வரலாறு தெரிவிக்கிறது.

தல வரலாறு

சப்தரிஷி அத்திரி இந்த தளத்தில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்ட காலத்திற்குப் பிறகு லிங்கம் இருக்குமிடம் வேலமரக்காடாக மாறிவிட்டது என்று சொல்லப்படுகிறது. பொம்மி என்ற சிற்றரசார் அந்த பகுதியை ஆண்டு கொண்டிருந்த சமயத்தில் அவருடைய கனவில் தோன்றிய சிவபெருமான் போற்றி மூடப்பட்டிருந்த லிங்கமிருக்கும் இடத்தை அந்த சிற்றரசருக்கு தெரிவித்து கோவில் எழுப்புமாறு தெரிவித்தார் என சொல்லப்படுகிறது. ஈசனின் கட்டளையை ஏற்றுக் கொண்ட பூமி இந்த கோவிலை எழுப்பினார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆட்சி மாற்றத்தில் இந்த கோவிலின் கட்டமைப்புகள் நடைபெற்று வந்தாலும் பல காரணங்களால், சற்றேற குறைய 400 வருடங்கள் இந்த கோவிலில் வழிபாடுகள் நடக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அந்நியர்களின் படையெடுப்பு காரணமாக, இந்த கோவிலில் இருந்த சிலைகள் பாதுகாப்பிற்காக சாத்துவாசேரி என்ற கிராமத்திலுள்ள ஒரு விநாயகர்கோவிலில் பாதுகாப்பாக வைத்து பராமரிக்கப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. 1981 ஆம் வருடம் தான் இந்த லிங்கம் மறுமுறை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை புனஸ்காரங்கள் நடக்க தொடங்கினர் என்று சொல்லப்படுகிறது.

பலன்கள்

ஆயுள் விருத்தி பெற, விபத்து பயம் நீங்க, திருமணத்தில் இருக்கும் தடை நீங்க, பள்ளி தோஷம் நீங்க, கண் திருஷ்டி நீங்க, இந்த சிவபெருமானை வேண்டிக் கொள்ளலாம் என்றும் சொல்லப்படுகிறது