சாக்கு பையில் கிடந்தது பணமா?அல்லது பிணமா? பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போன போலீஸ்காரர்கள்!!

0
224
Was the money in the sack? Or a dead body? The policemen froze in shock!!
Was the money in the sack? Or a dead body? The policemen froze in shock!!

சாக்கு பையில் கிடந்தது பணமா?அல்லது பிணமா? பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போன போலீஸ்காரர்கள்!!

ஈரோடு மாவட்டம் மோளகவுண்டம்பாளையம் ஜீவானந்தம் வீதியில் நேற்று முன் தினம் அப்பகுதியில் அதிக அளவில் துர்நாற்றம் விசிக்கொண்டிருந்தது. இதன் காரணம் என்னவாக இருக்கும் என அப்பகுதி மக்கள் சென்று பார்த்தனர். அப்போது ஒரு சாக்கு மூட்ட பையில் இறுக்கமாக கயிறு கட்டிய நிலையில் ஒரு மூட்டை கிடந்தது.

சந்தேகம் அடைந்த பொதுமக்கள் உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் போலீசார்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.பின் அங்குள்ள மூட்டையை பிரித்து பார்த்த போது அழுகிய நிலையில் ஒரு சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் சடலத்தை பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணையில் மூட்டையில் சடலமாக கிடந்த வாலிபரின் வயது 40 இருக்கும் எனவும் கொலை செய்து சாக்கடையில் வீசி சென்றது தெரிய வந்தது.இது குறித்து கொலை செய்யப்பட்டவர் யார் ?எந்த பகுதியை சேர்ந்தவர் ?எதற்காக கொலை செய்யப்பட்டார் ?என பல கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றார்கள்.கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடையில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Previous articleநம்ம ஊரு சூப்பரு நிகழ்ச்சி!  பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி! 
Next articleஇந்த பகுதிகளுக்கு மட்டும் ஆவின் பால் விநியோகம் முற்றிலும் நிறுத்தம்! மக்கள் அவதி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here