அதிபர் பதவி விலகினால் மட்டுமே இது சாத்தியம்! இலங்கை எதிர்க்கட்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு!

0
65

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது இதன் காரணமாக, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விண்ணை முட்டுமளவிற்கு விலை உயர்வை சந்தித்திருக்கின்றன.

இதனால் பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்திருக்கின்றன. அதாவது சிங்களவர்கள் அனைவரும் தற்போது அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிரான மனநிலையில் இருக்கின்றனர்.

அதிலும் இலங்கை பிரதமர் ராஜபக்ஷேவின் முழு கட்டுப்பாட்டில் இருந்த நகரத்தில் போராட்டம் வெடித்திருக்கிறது. இது உலகளவில் கவனிக்கப்படவேண்டிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது.

இந்த நகரில்தான் கடந்த 2009ஆம் ஆண்டு ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது சிங்களவர்கள் கொக்கரித்தார்கள். ஆனால் இன்று அதே நகரில் ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டம் வெடித்திருப்பதும், அவருடைய இல்லம் தீ வைத்து எரிக்கப்பட்டிருப்பதும், குறிப்பிடத்தக்கது.

அதிலும் சரியாக குறிப்பிட்டு சொல்லவேண்டும் என சொன்னால் கடந்த 2009ஆம் வருடம் இதே மே மாதம் 18ஆம் தேதி இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான கலவரம் பெரிதாக வெடித்தது. கிட்டதட்ட 13 ஆண்டுகள் கழித்து அதே மாதத்தில் இலங்கையில் சிங்களவர்கள் ராஜபக்ஷ குடும்பத்தையே எதிர்க்கும் ஒரு நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இதைக்கண்டு தமிழ் உணர்வாளர்கள் மகிழ்ச்சியடைந்தாலும் தங்களுக்கே உரிய மனிதாபிமானம் காரணமாக, இலங்கையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்றும் பலர் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இலங்கையில் அதிபர் பதவி விலகினால் ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக்கொள்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அறிவித்திருக்கிறது.

இந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசன் ராஜகருணா ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அதிபர் பதவி விலகினால் ஆட்சியை கைப்பற்றுவது என எங்கள் கட்சி தீர்மானித்திருக்கிறது.

பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய அதிபர் பதவி விலகினால் மட்டுமே நம்முடைய கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்று முன்மொழிந்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் இந்த கட்சி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும், தகவல்கள் கிடைத்திருக்கின்றன.