லண்டன் டெஸ்ட் : வெற்றிபெறுமா இந்திய அணி!

0
201

லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டியில் இன்று நடைபெறும் 5 ஆம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு மேலும் 299 ரன்கள் தேவைபடும் நிலையில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணி வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணி இந்திய அணியைவிட 99 ரன்கள் முன்னிலை பெற்றது.
99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மாவின் சதம் ,ரிஷப் பண்ட் ,ஷர்துல் தாகூர் ஆகியோரின் அசத்தலான ஆட்டத்தால் இந்தியா 2-வது இன்னிங்சில் 466 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 368 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி, 2-வது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்ட இந்திய பந்து வீச்சாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இங்கிலாந்து வீரர்கள் மிகவும் கவனமுடனும் ஏதுவான பந்துகளை மட்டுமே அடித்து இந்திய பந்து வீச்சாளர்களை சோதித்தனர். 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு 10 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் வெற்றிக்கு இன்னும் 291 ரன்கள் தேவைப்படுகிறது. நாளை 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. வெற்றிக்கு இரு அணிகளும் போராடும் என்பதால் ஓவல் டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி இந்த போட்டியில் வெற்றிபெறும் பட்டசத்தில் தொடரை சமன் செய்யலாம் அல்லது வெல்லாம் என்பதால் இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.

Previous articleபோலி கொரோனா தடுப்பூசிகள் : மத்திய அரசு எச்சரிக்கை
Next articleஉள்ளாட்சி தேர்தல் : அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here