பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி! வங்காள தேசத்துக்கு 230 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி!

0
55

கிரிக்கெட் என்றாலே ஆண்களுக்குண்டான விளையாட்டு என்ற உலக நியதியை மாற்றும் விதமாக பெண்களும் ஆண்களுக்கு நிகராக பல சாதனைகளை இந்த விளையாட்டில் புரிந்து வருகிறார்கள்.மேலும் ஆண்களைப் போலவே பெண்களும் இந்த கிரிக்கெட் விளையாட்டில் பல சாதனைகளை புரிந்து வருகிறார்கள் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை.

இந்த நிலையில், பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது இதில் இன்று நடைபெற்று வரும் 22வது லீக் ஆட்டத்தில் இந்திய அணியும், வங்காளதேச அணியும், பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்..

இதனையடுத்து தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய மந்தனா, சபாலி வர்மா, ஜோடி மிக சிறப்பாக விளையாடியது ஷபாலி மந்தனா 42 ரன்கள் எடுத்த நிலையிலும், ஸ்மிருதி மந்தனா 30 ரன்களிலும், ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று விளையாடிய யாஷிகா பாட்டியா அரைசதமடித்து ஆட்டமிழந்தார்.

பின்வரிசையில் ரிச்சா கோஷ் 26 ரன்கள் எடுத்து சற்று ஆறுதல் வழங்கினார். கட்டத்தில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்திருக்கிறது இந்திய அணி. இதனைத்தொடர்ந்து 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கவுள்ளது.