அமெரிக்கா இரங்கல்

அமெரிக்கா இரங்கல்

கேரள விமான விபத்து குறித்து அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்ததாகவும் 173 பேர்  படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த விபத்து குறித்து மிகவும் வருந்துவதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்காவும், நண்பர்களுக்காகவும் நாங்கள் மிகவும் துயரப்படுகிறோம் தெரிவித்துள்ளது.

சிக்கி தவிக்கும் பிரேசில்

சிக்கி தவிக்கும் பிரேசில்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி எடுத்து வந்தாலும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 22 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக பிரேசிலில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது.

சீனாவின் நரி தந்திரத்தால் இந்தியாவுக்கு சிக்கல்!!

சீனாவின் நரி தந்திரத்தால் இந்தியாவுக்கு சிக்கல்!!

சீனா தற்பொழுது உலக நாடுகளை குறிவைத்து பணவலை விரிக்கும் நரி தந்திரத்தை அரங்கேற்ற நினைப்பதால், இந்தியாவிற்கு கொஞ்சம் சிக்கல் ஏற்பட காத்திருக்கிறது. ஏனென்றால்,உலகில் வளர்ந்து வரும் 68 நாடுகளுக்கு சீனா தாராளமாக கடன் கொடுத்து இருக்கிறதாம். உலக வங்கி இந்த 68 நாடுகளுக்கு கொடுத்து இருக்கும் கடன் அளவுக்கு கொஞ்சம் குறைவாக கொடுத்துள்ளனர்.. 2018-ம் ஆண்டு கணக்குப் படி, உலக வங்கி இந்த 68 வளரும் நாடுகளுக்கு கொடுத்திருக்கும் கடனில், பாக்கி நிலுவைத் தொகை, சுமாராக 103 … Read more

கொரோனாவால் திணறும் அமெரிக்கா

கொரோனாவால் திணறும் அமெரிக்கா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 95 லட்சத்து 24 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 63 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 62 லட்சத்து 67 ஆயிரத்து 252 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 98 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் … Read more

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நிலவரம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நிலவரம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. விஞ்ஞானிகள்  கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சத்தை கடந்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 62 லட்சத்து 67 ஆயிரத்து 252 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 98 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

வந்தாச்சு ! கொரோனாவுக்கு தடுப்பூசி! ஆகஸ்ட் 12 வெளியீடு- சபாஷ் ரஷ்யா!

வந்தாச்சு ! கொரோனாவுக்கு தடுப்பூசி! ஆகஸ்ட் 12 வெளியீடு- சபாஷ் ரஷ்யா!

வந்தாச்சு ! கொரோனாவுக்கு தடுப்பூசி. ஆகஸ்ட் 12 வெளியீடு- சபாஷ் ரஷ்யா! ஆகஸ்ட் 12ஆம் தேதி கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகளை ரஷ்யா உலகிற்கு முதலில் களமிறக்க உள்ளது. அக்டோபர் மாதத்தின் இறுதியில் அதற்கான உற்பத்தி தொடங்கும் என அறிவிப்பு.ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் முரஸ்கோ தகவல். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எப்படியாவது நாம் முதலில் கொரோனாவுக்கு தடுப்பூசியினை கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். இதில் … Read more

லெபனான் நாட்டிற்க்கு தேடி வரும் உதவிகள்

லெபனான் நாட்டிற்க்கு தேடி வரும் உதவிகள்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் நடந்த வெடிப்பில் உலகம் முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த விபத்தில்  150 பேர் இறந்தனர். ஆயிரம் பேருக்கு மேல் காயமடைந்தனர். இந்த நிலையில் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லெபனானுக்கு பல்வேறு வகைப்பட்ட உதவிகள்  சேர்ந்தவண்ணம் உள்ளன. இந்த வெடி விபத்தானது மனித வரலாற்றிலேயே மிகவும் மோசமானது.

சவுதி பட்டத்து இளவரசர் மீது குற்றசாட்டு

சவுதி பட்டத்து இளவரசர் மீது குற்றசாட்டு

சவுதி பட்டத்து இளவரசர் சவுதி முன்னாள் உளவுத்துறை அதிகாரியான சாத் அல்-ஜாப்ரியை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இந்த மனு அமெரிக்காவின் உள்ள  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. டொரொன்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கூலிப்படையினர் நாட்டிற்குள் நுழைய முயன்றபோது கனாடா எல்லைப்படையினருக்கு சந்தேகம் எழுந்ததையடுத்து, ஜாப்ரியை கொல்லும் சதி திட்டம் முறியடிக்கப்பட்டது என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

ஊழியர்களுக்கு அனுமதி அளித்த பேஸ்புக் நிறுவனம்

ஊழியர்களுக்கு அனுமதி அளித்த பேஸ்புக் நிறுவனம்

உலகம் முழுவதும் கொரோனா 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெறும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளில் ஊரடங்கு நிலை அமலில் உள்ளது.  இதனால் பொருளாதார தேக்கநிலையும் உருவாகி உள்ளது. இதன் காரணமாக கார்ப்பரேட் நிறுவனங்கள்  அனைத்தும் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.  அந்த அறிக்கையில், சுகாதார மற்றும் அரசு நிபுணர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில், கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடி சூழலை பற்றி உள்மட்ட அளவில் … Read more

20000 ஆண்டுகளுக்கு முன்பே உறை கிணற்றினை அமைத்து வாழ்ந்த தமிழ்ர்கள்

20000 ஆண்டுகளுக்கு முன்பே உறை கிணற்றினை அமைத்து வாழ்ந்த தமிழ்ர்கள்

உலகம் தோன்றிய பின் மனிதர்கள் தோன்றிய முதல் குடி தமிழ் குடி என்று கீழடி அகழ்வாராய்ச்சி விளக்குகிறது.கீழடி அகழ்வாராய்ச்சி என்பது 20,000 வருடங்களுக்கு முன் மனிதர்கள் பயன்படுத்திய நாகரீக மற்றும் பண்பாட்டு வாழ்விடங்களை பூமிக்குள் புதைந்து இருப்பதனை தோண்டி எடுக்கும் ஒரு அகழ்வாராட்சி செயலாகும். பல வருடங்களாக கீழடி அகழ்வாராய்ச்சி நடந்து வரும் நிலையில் ,தற்போது 6-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடங்கியுள்ளது.ஏற்கனவே இந்த அகழ்வாராய்ச்சியில் இருக்கும்பொழுது பத்துக்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள், குடிமக்களின் தாலி, விலங்குகளின் எலும்புக் கூடுகள் … Read more