அதிர்ச்சித் தகவல்! உலகளாவிய கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 28.31 கோடியாக அதிகரிப்பு!

0
74

தென்னாப்பிரிக்க நாட்டில் முதல் முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் மற்ற நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 600க்கும் மேற்பட்டோர் இந்த புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

இந்த சூழ்நிலையில், தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கையை 2.37 கோடியை கடந்து இருக்கிறது இதன் அடிப்படையில் உலகம் முழுவதும் தற்சமயம் 28 கோடியே 31 லட்சத்து 62709 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் நோய் தொற்று பாதிப்பில் இருந்து இதுவரையில் 25 கோடியே 17 லட்சத்து 94 ஆயிரத்து 247 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். அதோடு இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை 54 லட்சத்து 30 ஆயிரத்து 324 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

இந்த நோய்த் தொற்றுக்கு தற்போது 2 கோடியே 59 லட்சத்து 37 ஆயிரத்து 632 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள், சிகிச்சை பெறுபவர்களின் 89,097 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.