இந்திய மக்களுக்கு எச்சரிக்கை! இதோ அடுத்த புதிய வகை கொரோனா வைரஸ்! 

0
90
Warning to Indian people! Here is the next new type of corona virus!
Warning to Indian people! Here is the next new type of corona virus!

இந்திய மக்களுக்கு எச்சரிக்கை! இதோ அடுத்த புதிய வகை கொரோனா வைரஸ்!

கொரோனா தொற்றானது தற்போதுதான் முடிவுற்ற மக்கள் தங்கள் பழைய நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பித்துள்ளனர்.மேலும் மக்கள் தற்போது விழிப்புணர்வுடன் தடுப்பூசி செளுத்திக்கொள்ளவும் முன் வந்துள்ளனர்.இதுவரை கொரோனா முதல் அலை இரண்டாம் அலை என அனைத்தையும் கடந்த நிலையில் நிலையில் தற்பொழுது புதிய வகை கொரோனா  வைரஸ் உருவாகியுள்ளது.குறிப்பாக இந்தியாவில் இவ்வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஏ ஒய் 4.2 என்ற புதிய வகை வைரஸ் என்று கூறுகின்றனர்.

இந்த புதிய வகை வைரஸ் அதிவேகமாக பரவக்கூடிய தன்மை கொண்டதாம்.இந்தியாவில் இதுவரை 17 பேர் இவ்வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு வைரஸை குறித்து ஐசிஎம்ஆர் அமைப்பு சோதனை தற்போது நடத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் உயிர்சேதம் குறைவாக தான் இருக்கும் என ஐ சி எம் ஆர் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் அவர்கள் தனியார் தொலைக்காட்சி ஊடகத்திற்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியது,SARS_CoV2 வைரசின் துணை பரம்பரை டெல்டா வகை தான் AY 4.2 கொரோனா தொற்று ஆகும்.இந்த புதிய வகை வைரஸ் அதிக பரவ கூடியதாக உள்ளது.இந்த வைரஸ் வீரியம் மிக்கதாக இருக்காது.

இருப்பினும் இந்த வைரஸ் பற்றி  மக்கள் அச்சப்படும் அளவிற்கு யாரும் தவறான தகவலை கூறக் கூடாது என்று தெரிவித்தனர்.அதுமட்டுமின்றி இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர். இந்த புதிய வகை தொற்றானது கர்நாடகா கேரளா ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் அதன் மாதிரிகளை எடுத்துள்ளனர். மேற்கொண்டு அது குறித்த சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.தற்பொழுது வரை 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி நடைமுறையில் உள்ளது.அதனால் இந்த வைரஸால் குழந்தைகளுக்கு ஏதேனும் பாதிப்பு அதிகரிக்குமா என்ற சந்தேகம் உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.