எலும்பு பல மடங்கு பலமடையும்!! இந்த ஒரு பொருள் போதும் தினமும் சாப்பிட்டு பாருங்கள்!!

0
102

எலும்பு பல மடங்கு பலமடையும்!! இந்த ஒரு பொருள் போதும் தினமும் சாப்பிட்டு பாருங்கள்!!

எள் ஒரு மருத்துவ மூலிகை. எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும். எள் விதைகளில் இருந்து பிழிந்து எள்நெய் பெறப்படுகிறது. எள்நெய் என்பதே எண்ணெய் எனப்படுவது, ஆனால் பொதுவாக இதை நல்லெண்ணெய் என்று அழைப்பர். எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. எள் வறண்ட பகுதியிலும் வளரக் கூடியது. இதைப் பயிரிடும் போது ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சியை தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது. எள்ளில் 20% புரதமும் 50% எண்ணெயும் 16% உள்ளன.

எள்ளு விதைகளில் அதிகமாக இருக்கும் மக்னீசியம் ரத்த அழுத்த நோயை குறைக்க உதவும் சத்துகள் நிறையவே இருக்கின்றன.

தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு, புண்களை போக்க எள்ளு விதையை அரைத்து பூசி வர படிப்படியாக குணமாகும்.

எள்ளின் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வரும் சாரை எடுத்து முகம் கழுவினால் முகம் பொலிவோடும், கண்கள் ஒளி பெறவும், கண் நரம்புகள் பலப்படுத்தி நலமாகும்.

 

மாமிச உணவு சாப்பிடாதவர்கள் எள்ளுருண்டை சாப்பிடுவது நல்ல பலத்தை தரும். எள்ளு உருண்டையில் துத்தநாக சத்தும், இரும்பு சத்தும் இருக்கிறது. மேலும் வயதானவர்கள் எள்ளு உருண்டையை சிறந்த உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

இதனால் எலும்புகள் பலமடையும், ஆரோக்கியத்தை தரும். இதனால் உடல் சோர்வு குறைந்து சக்தியை தரும் எள்ளை சேர்த்து சூடான சாதத்தோடு உண்டுவர உடல் பலம் அதிகரிக்கும்.

எள்ளின் நல்லெண்ணெயை இரு கண்களிலும் விட்டு, தலையில் தடவி சுடுநீரில் மூன்று நாட்கள் தலை முழுகி வர சிவந்த கண், கண் வலி, கண்ணில் நீர் வடிதல், கண் கூச்சம், மென்மை குத்தல் ஆகியவை தீரும்.

author avatar
Jeevitha