இயக்குனர் ஜெகநாதன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் தங்கமகன். திரைப்படத்தில் ரஜினிகாந்த், பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா ஆவர். மேலும் இந்த திரைப்படம் ஆனது தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தின் சில சுவாரசியமான தகவல்கள் தற்பொழுது பகிரப்பட்டு வருகின்றன. அவற்றை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.
தங்க மகன் திரைப்படம் இயக்கி கொண்டிருந்த தருணத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே ஒன்றரை மாதங்கள் அவரால் படப்பிடிப்பு தளத்திற்கு வர முடியாமல் போய் உள்ளது. மேலும், தன்னுடைய உடல்நிலை சரியான உடனே படப்பிடிப்பு தளத்திற்கு வந்து தன்னுடைய சிறந்த நடிப்பினாலும் தனிப்பட்ட திறமைகளும் இப்படத்தை வெற்றியின் உச்சிக்கு கொண்டு சேர்த்துள்ளார்.
இத்திரைப்படத்தில் அவர் முழுமையான சம்பளம் பெறாத நிலையில், படக்குழு அவருடைய மீதமுள்ள சம்பளமான 10 லட்சம் ரூபாயை அவரிடம் கொடுத்தபொழுது அவர் அதனை பெற்றுக் கொள்ளவில்லையாம். அதற்கு மாறாக பணத்தினை தயாரிப்பாளரிடமே கொடுத்து விடும்படியும் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்குக் காரணம் தான் நடிக்க தாமதப்படுத்தியதால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது அதனால் இந்த பணத்தினை அவரிடமே கொடுத்து விடுங்கள் என்றும் பட குழுவிடம் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்திருககிறார்.