தக்காளியை தொடர்ந்து  அடுத்து இந்த நிகழ்வுகள் நடக்கும்! பஞ்சாங்கத்தில் குறிப்பிட்ட தகவலால் மக்கள் அதிர்ச்சி!!

0
34

தக்காளியை தொடர்ந்து  அடுத்து இந்த நிகழ்வுகள் நடக்கும்! பஞ்சாங்கத்தில் குறிப்பிட்ட தகவலால் மக்கள் அதிர்ச்சி!!

 

தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை உயர்வை அடுத்து நிகழ்வுகள் நடக்கும் என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் தகவலை அறிந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

 

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தக்காளியின் விலை அதிகரித்து வருகின்றது. ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் தக்காளியின் விலை உயரத் தொடங்கி தற்பொழுது உச்சம் தொட்டுள்ளது. இதனால் மக்கள் சமையலில் தக்காளியை குறைத்து பயன்படுத்துகின்றனர். சிலபேர் தக்காளியை சமையலுக்கு பயன்படுத்தாமல் இருக்கின்றனர். மேலும் தக்காளியின் நண்பர்களாக இருக்கும் மற்ற காய்கறிகளின் விலையும் தற்பொழுது அதிகரித்து வருகின்றது.

 

இந்த நிலையில் தக்காளியின் விலை அதிகரிக்கும் என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது.

 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு சீதா ராமய்யர் குறித்த பஞ்சாங்க குறிப்பில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தக்காளியின் விலை உயரும் என்று கணிக்கப்பட்டது. 2023-24ம் ஆண்டுக்கான பஞ்சாங்க குறிப்பில் சோபகிருது தமிழ் ஆண்டின் 34வது மற்றும் 35வது பக்கங்களில் இந்த தகவல் உள்ளது.

 

அறிவியல் என்பதை மீறியும் வாழ்வியல் சாஸ்திரமாக கருதப்படும் பஞ்சாங்க குறிப்பில் புயல், மழை, விளைச்சல், வானிலை போன்ற தகவல்கள் குறித்து துல்லியமாக கணிக்கப்பட்டிருக்கும் நிகழ்வு வியப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்நிலையில் தக்காளியின் விலை அதிகரிப்பது குறித்து முன்கூட்டியே கணித்தது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து ஆற்காடு ஜோதிடர் சுந்தர்ராஜன் அவர்கள் “ஆற்காடு பஞ்சாங்க குறிப்பில் குறிப்பிட்டது போலவே தக்காளியின் விலை தற்பொழுது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டில் மும்பை, டெல்லி, ஒரிசா போன்ற மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டது. அதன்படி வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது.

 

நாட்டில் மேலும் மணல் பிரச்சனை தீரும் என்றும் கட்டிட உபகரணங்களின் விலை குறையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆற்காடு பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டப்படி அனைத்தும் நடந்து வருகின்றது” என்று கூறியுள்ளார்.