தெரு நாய்களின் தாக்குதலுக்குள்ளான நபர்களுக்கு நிதி உதவியா? மத்திய அரசு அளித்த விளக்கம்

0
114

தெரு நாய்களின் தாக்குதலுக்குள்ளான நபர்களுக்கு நிதி உதவியா? மத்திய அரசு அளித்த விளக்கம்

நாட்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை மற்றும் அதன் தாக்குதலால் காயமடைந்த அல்லது உயிரிழந்த நபர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு தெரு நாய்களின் கணிசமாக குறைந்துள்ளது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளது.

நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளதா எனவும் தெரு நாய்களின் தாக்குதலால் உயிரிழந்த அல்லது காயம் அடைந்த நபர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் ஏதேனும் இருக்கிறதா எனவும் மக்களவை உறுப்பினர் தாமஸ் சழிகடன் மத்திய கால்நடை துறை அமைச்சகத்திற்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் பரிசோத்தம் ரூபலா நாட்டில் உள்ள தெருநாய்கள் குறித்த எண்ணிக்கை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் கால்நடை கணக்கெடுப்பு மூலமாக மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

அந்த தரவுகளின் படி 2012 ஆம் ஆண்டு 171.4 லட்சமாக இருந்த தெரு நாய்களின் எண்ணிக்கை 2019 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 153.1 லட்சமாக குறைந்து இருப்பதாக குறிப்பிட்டார். தமிழகத்தை பொருத்தவரை 2012ல் 6,47,798 ஆக இருந்த தெரு நாய்களின் எண்ணிக்கை 2019 இல் 441208 ஆக குறைந்திருப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் தெரு நாய்களின் தாக்குதலால் உயிரிழந்த அல்லது காயமடைந்த நபர்களுக்கு நிதி உதவி அல்லது இழப்பீடு வழங்குவதற்கு விதிகளில் இடமில்லை எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்