வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு! உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசு!

0
57

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தமிழக சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது, இந்த நிலையில் திமுக அரசு பதவிக்கு வந்தவுடன் அரசாணையும் வெளியிடப்பட்டது.

இதற்கிடையே வன்னியர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க வேண்டுமென தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவசரம் கருதி நாள்தோறும் இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டி உள்ளதால் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை க்கு மாற்றப்பட்டது அதன் அடிப்படையில் சிறப்பு வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு நாள்தோறும் விசாரணை நடந்தது ,அந்த சமயத்தில் வன்னியர்களுக்கு 10.5% முன்னுரிமை வழங்கும் சட்டம் ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

இந்த சூழ்நிலையில், வன்னியர் சமூகத்திற்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.

இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது, இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்த மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவு தவறான செயல். மதுரை உயர்நீதிமன்ற உத்தரவால் தமிழக அரசின் ஒட்டு மொத்த நிர்வாகமும் சிக்கலை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு அந்த மனுவில் தெரிவித்திருக்கிறது.