உதகை தாவரவியல் பூங்காவில் 125-வது பிரசத்தி பெற்ற மலர் கண்காட்சி!!

0
162
#image_title

உதகை தாவரவியல் பூங்காவில் 10 மணிக்கு 125-வது பிரசத்தி பெற்ற மலர் கண்காட்சி துவங்கவுள்ளது. மலர் கண்காட்சிக்காக சுமார் 2 லட்சம் வண்ண வண்ணை மலர்களை கொண்டு கண்கவர் மலர் அலங்காரங்களால் ஜொலிக்கிறது தாவரவியல் பூங்கா.

5 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 85 ஆயிரம் கார்னேசன் மலர்களை கொண்டு 46 அடி அகலம் 22 அடி உயரத்திலான தேசிய பறவை மயில் உருவம் அமைக்கபட்டுள்ளது.

125-வது மலர் கண்காட்சியை குறிப்பிடும் வகையில் 16 ஆயிரம் மலர்களை கொண்டு 125-th flower show வடிவமும், தாவரவியல் பூங்கா உருவாக்கபட்டு 175 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் விதமாக 15 ஆயிரம் மலர்களை கொண்டு 175 Year of garden உருவமும் அமைக்கபட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டு மாநில சின்னங்களான நீலகிரி வரையாடு, மரகத புறா, பனைமரம், செங்காந்தல் மலர், பரதநாட்டிய மங்கை, பட்டாம்பூச்சி போன்றவைகள் 30 ஆயிரம் மலர்களை கொண்டு காட்சிபடுத்தப்பபட்டள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்க ரோஜா மலர்களை கொண்டு செல்பி பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக்ஐவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக அவரது மார்பளவு வெண்கல சிலையும் நாளை திறக்கபட உள்ளது. அது மட்டுமின்றி 35 ஆயிரம் தொட்டிகள் வண்ண வண்ண மலர்கள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளது.

author avatar
Savitha