மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்! சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள்!

0
68

வெளிநாடுகளில் இருந்து வந்த கொரோனா நோயாளிகளை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனத்துடன் கண்காணித்து வருகிறார்கள் .அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5 கொரோனா நோயாளிகளும் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறார்கள். ஆகவே மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். சென்னை கிண்டியில் இருக்கின்ற கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்து இருக்கின்றார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் தெரிவித்ததாவது,

சென்ற நவம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் இன்று வரையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 2390 பேருக்கு கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டது அதில் லண்டனிலிருந்து வந்த மதுரை மற்றும் சென்னையை சேர்ந்த தலா ஒரு நபர், தஞ்சையை சேர்ந்த இருவர் என்ற நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கின்றது அதேபோல சென்னையை சேர்ந்த தினேஷ் உள்பட 5 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இருக்கின்றது.

சுகாதாரத் துறை சார்பாக மக்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டியது இல்லை. ஆனாலும் மக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு வரும் தடுப்பூசிகள், இந்த தொடருக்கு நல்ல பலனை கொடுக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. ஆனாலும் தடுப்பூசி தயாராகி விட்டது என்ற காரணத்திற்காக, யாரும் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம். என பொது மக்களை வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன் ஒரு நாளைக்கு எழுபது ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. அதிலே ஒரு நாளைக்கு ஆயிரம் பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகின்றது. சென்னையில் ஒரு நாளைக்கு 300 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்படுகின்றது. சென்னையில் நோய்த்தொற்று வெகுவாக குறைந்து வருகின்றது இவ்வாறு திரு. ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கின்றார்.