கடலில் படகு கவிழ்ந்து 41 பேர் பரிதாபமாக உயிரிழப்பு… இத்தாலி அருகே ஏற்பட்ட சோகம்!!

0
36

 

கடலில் படகு கவிழ்ந்து 41 பேர் பரிதாபமாக உயிரிழப்பு… இத்தாலி அருகே ஏற்பட்ட சோகம்…

 

இத்தாலி அருகே அகதிகளாக கடலில் பயணம் செய்த மக்கள் சென்ற படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

 

வறுமை காரணமாக வாழ்வாதாரம் தேடி ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் மற்ற நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அதிலும் அதிகம் மக்கள் கடல் வழியாக சட்டத்திற்கு புறம்பான முறையில் அகதிகளாக மற்ற நாடுகளை நோக்கி பயணம் செய்கின்றனர்.

 

மேலும் அகதிகளாக பயணம் செய்யும் ஆப்பிரிக்க மக்கள் சட்டவிரதோமாக ஐரோப்பாவை அடைய முயற்சி செய்கின்றனர். இவ்வாறு கடல் மார்க்கமாக படகின் மூலமாக பயணம் செய்யும் பொழுது இந்த பயணம் ஆபத்தில் முடிந்து சோகத்தை ஏற்படுத்துகின்றது.

 

அந்த வகையில் தற்பொழுது புலம்பெயர்ந்தோர் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 41 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

 

துனிசியாவில் இருக்கும் ஸ்பாக்ஸில் இருந்து இத்தாலி நோக்கி மூன்று குழந்தைகள் உள்பட 45 புலம்பெயர்ந்தோருடன் இத்தாலி நோக்கி படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது இத்தாலி அருகே உள்ள லம்பேடுசா என்ற தீவின் அருகே இந்த படகு விபத்துக்கு உள்ளாகி கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் படகில் பயணித்த 41 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படகில் பயணித்தவர்கள் துனிசியாவில் இருந்து அல்லது அண்டை நாடான லிபிசியாவில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. படகு கவிழ்ந்து 41 பேர் பலியான நிலையில் இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

நடப்பாண்டு அதாவது 2023ம் ஆண்டு மட்டும் வட ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்குள் நுழைய முற்பட்ட பொழுது 1800 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் 90000 பேர் இத்தாலிக்கு அகதிகாளாக வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.