மக்களுக்கு தமிழக அரசு கொடுக்கும் உண்மையான பொங்கல் பரிசு இதுதான்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

0
62

திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருக்கும் ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைகளை இலவசமாக மீட்டுக் கொள்ளலாம் என்று கூறியிருந்தது. அதாவது கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் நகை கடன்கள் தள்ளுபடி என்ற பெயரில் 5 பவுன் வரையில் நகை அடகு வைத்திருப்பவர்கள் தொகையை செலுத்த வேண்டாம் என்று தெரிவித்திருந்தது.

இந்த உத்தரவை தமிழக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக தள்ளுபடி செய்யும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவளிக்கு முன்பாக இந்த அறிவிப்பு வெளியானது, ஆகவே தீபாவளி சமயத்தில் இது தொடர்பாக தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தீபாவளிக்கு முன்பாகவே கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் நகைகள் அனைத்தும் அவரவர் வீடு தேடி வரும் என்றும் இதுதான் தமிழக அரசு தமிழக மக்களுக்கு கொடுக்கும் தீபாவளி பரிசு என்றும் தெரிவித்திருந்தது.

ஆனாலும் தீபாவளி முடிந்து கிட்டத்தட்ட ஒன்றரை மாத காலங்கள் ஆகிவிட்ட சூழ்நிலையில், இன்னும் அது தொடர்பாக எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்த சூழ்நிலையில், திண்டுக்கல்லில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கியில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் கடனை தள்ளுபடி செய்வதற்கு அனைத்துவிதமான நடவடிக்கைகளும் நிறைவு பெற்றுவிட்டனர். அதோடு நகைகளை திரும்ப கொடுப்பதற்கு பட்டியல் தயாரிக்கப்பட்டு விட்டது, ஆகவே பொங்கல் பண்டிகைக்கு முன்பாக நகைகள் திரும்ப கொடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

நகை கடன், சுய உதவி குழு கடன், உட்பட கூட்டுறவு துறையின் மூலமாக 20 ஆயிரம் கோடிக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டியது நிலுவையில் இருக்கிறது. ஆகவே நிதி நிலைக்கு உட்பட்டு பொங்கல் பரிசு தொகை தொடர்பாக முதலமைச்சர் முடிவு செய்வார் என்று தெரிவித்திருக்கிறார். இணையதளத்தின் மூலமாக பதிவு செய்து மணல் பெறுவதற்கு அரசு பரிசீலனை செய்து வருகிறது. அதன்மூலம் கட்டுமான பணிக்கு தட்டுப்பாடு இல்லாமல் மணல் கிடைக்கும் என்றும், அவர் கூறியிருக்கிறார்.