கொரோனா பாதித்த ரோஹித் ஷர்மா இப்போது எப்படி இருக்கிறார்?… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

0
177

 

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கொரோனா பாதிப்பால் தற்போது நடக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.

இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு நடந்த தொடருக்குப் பிறகு இரண்டு அணிகளிலும் தலைமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் மாறியுள்ளன. இந்திய அணிக்கு புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மாவும், இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸும் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு நடக்க உள்ள போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2-1 என்ற கணக்கில் இந்திய அணி இந்த தொடரில் முன்னிலை வகிக்கின்றது. இதற்கிடையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக துணைக் கேப்டன் ஜஸ்ப்ரீத் பூம்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்திக் கொண்ட ரோஹித் ஷர்மா தற்போது எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில் முழுவதும் குணமாகியுள்ளார். இதையடுத்து அவர் இங்கிலாந்து அணிக்கெதிரான டி 20 போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleகண் இமைக்கும் நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்.!தூள் தூளாக நொறுங்கிய பேருந்தின் முன் பக்க கண்ணாடி! 
Next article30 வருட சினிமா வாழ்க்கையில்… ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கப்போகும் ஷங்கர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here