இந்த பகுதிகளுக்கு மட்டும் ஆவின் பால் விநியோகம் முற்றிலும் நிறுத்தம்! மக்கள் அவதி!

0
296
Complete stoppage of milk supply to these areas only! People suffer!
Complete stoppage of milk supply to these areas only! People suffer!

இந்த பகுதிகளுக்கு மட்டும் ஆவின் பால் விநியோகம் முற்றிலும் நிறுத்தம்! மக்கள் அவதி!

தமிழ்நாடு அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் வேலூர் கிளை மூலமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆவின் பால் விநியோக்கப்படுகிறது .இந்நிலையில் இன்று காலை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்கள்  முழுவதும் ஆவின் பால் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. மூன்று மாவட்டங்களுக்கும் சேர்த்து 22 விநியோக வாகனங்கள் இயக்கப்பட்ட நிலையில் இன்று  காலை  அதில் ஒரு வாகனம் கூட இயக்கப்படவில்லை.

மேலும் வேலூர் மாநகருக்கு சொந்தமான முகவர்கள் தங்கள் சொந்த வாகனங்களை எடுத்து வந்து பால் பாக்கெட்டுகளை வாங்கி சென்றனர். இதற்கான காரணம் ஒப்பந்ததாரர்கள் குளறுபடி மற்றும் ஆட்கள் பற்றாக்குறையால் பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும்  திடீர் பால்வினியோகம் நிறுத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள்  கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

Previous articleசாக்கு பையில் கிடந்தது பணமா?அல்லது பிணமா? பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போன போலீஸ்காரர்கள்!!
Next articleஅனைத்து  பல்கலைக்கழகத்திற்கும் முக்கிய தகவல்! உயர்கல்வித்துறை அமைச்சர்  வெளியிட்ட அறிவிப்பு !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here