அனைத்து  பல்கலைக்கழகத்திற்கும் முக்கிய தகவல்! உயர்கல்வித்துறை அமைச்சர்  வெளியிட்ட அறிவிப்பு !

0
105
Important information for all university! The announcement made by the Minister of Higher Education!
Important information for all university! The announcement made by the Minister of Higher Education!

அனைத்து  பல்கலைக்கழகத்திற்கும் முக்கிய தகவல்! உயர்கல்வித்துறை அமைச்சர்  வெளியிட்ட அறிவிப்பு !

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக்ததில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது.அந்த மாநாட்டில் நான் முதல்வன் திட்டம், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக மாநில அரசு நியமனம் செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்நிலையில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில்  இரண்டாவது  செமஸ்டரில் தமிழ் பாடம் கட்டாயம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில்  அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில் இரண்டாவது செமஸ்ட்டரில் தமிழ் பாடம் கட்டாயம்.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற அனைத்து பல்கலைக்கழகத்திலும் தமிழ் பாடத்திற்கான தேர்வுகள் நடத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ வகுப்புகளில் உருது, ஃபிரெஞ்சு படித்த மாணவர்கள், தமிழ் கற்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த முடிவால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை உருவாகும் என கூறப்படுகிறது.

author avatar
Parthipan K