எண்ணிய காரியங்கள் நிறைவேற விநாயகரை இப்படி வழிபடுங்கள்!! கஷ்டங்கள் நீங்கி வீட்டில் சுபிட்சம் பெருகும்!
உலகின் முதற் மூத்த கடவுளாக போற்றப்படும் விநாயக பெருமானை நாள்தோறும் வாங்குவதால் நமக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகும்.நம் வாழ்வில் கடன்,மன நிம்மதி நிம்மதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் சந்தித்து வருகிறோம்.இதற்கு முக்கிய காரணம் சிந்தனை இன்றி செயல்படுதல்.நிதானம்,பொறுமை,முயற்சி,நம்பிக்கை போன்றவை நம்மில் பலருக்கு இல்லாததால் நாம் பல்வேறு கஷ்டங்களை சந்தித்து வருகிறோம்.இந்த நமக்கு ஏற்படும் பாதிப்புகள்,மனக் கவலைகள் போக நாம் தினமும் விநாயகரை வழிபடுவது அவசியமான ஒன்றாகவும்.
7 நாட்கள் விநாயகர் வழிபாடு செய்வதால் ஏற்படும் அற்புத நன்மைகள்:-
உதாரணத்திற்கு சனிக்கிழமை வழிபாடு மேற்கொள்ள இருக்கிறீர்கள் என்றால் அடுத்த வெள்ளி கிழமை வரை விநாயகரை தரிசிக்க வேண்டும்.
காலையில் எழுந்ததும் குளித்து முடித்து விட்டு உடம்பு மற்றும் மனசு சுத்தபத்தமான நிலையில் வீட்டில் இருக்க கூடிய விநாயகர் புகைப்படம் அல்லது சிலைக்கு முன் மஞ்சள்,குங்குமம் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.நான் சொல்வது மற்ற நாட்களில் வழிபாட்டிற்கு ஏற்றும் சாதாரண தீபம் அல்ல.இது விநாயகருக்கு உகந்த அருப்புதமான வெட்டி வேர் தீபம்.
வெட்டி வேர் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்க கூடிய ஒன்று.அதனை வாங்கி வந்து தீபம் ஏற்றி வைப்பதால் நமக்கும் நம் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும் கோடி நன்மைகள் ஏற்படும்.
விநாயகருக்கு முன் விளக்கு வைத்து அதில் வெட்டி வேர் திரியை வைத்து எண்ணெய் ஊற்றி பற்ற வைக்க வேண்டும்.அதற்கு முன் அவரது பாதத்தில் அருகம்புல் வைக்க வேண்டும்.அதனோடு வாசனை நிறைந்த ஏலக்காய் வைத்து வழிபட வேண்டும்.நமக்கு என்ன தேவையோ அதனை மனதில் ஆழமாக நினைத்து கொண்டு விநாயகனை கை எடுத்து வணங்கிய படி கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரங்களை மனதில் இருந்து உச்சரிக்க வேண்டும்.
விநாயகர் காயத்ரி மந்திரம்:-
வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.
ஸ்லோகம் 1:-
சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே.
ஸ்லோகம் 2 :-
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
ஸ்லோகம் 3 :-
ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
விநாயகர் மூல மந்திரம்:-
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே
வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா
இவை அனைத்தும் விநாயகர் வழிபாட்டின் பொழுது உச்சரிக்கப்பட வேண்டிய முக்கிய மந்திரங்கள் ஆகும்.தொடர்ந்து 7 நாட்கள் விநாயகரை இப்படி வழிபாடு செய்து வந்தோம் என்றால் கடன் பிரச்சனை,உடல் மற்றும் மனம் சார்ந்த பாதிப்பு உள்ளிட்ட அனைத்தும் நீங்கி வாழ்வில் முன்னேறுவதற்கான வழிகள் பிறக்கும்.