நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் “பூண்டு மிளகு சாதம்”- இப்படி செய்தால் அட்டகாசமான சுவையில் இருக்கும் மக்களே!!

0
82
garlic-pepper-rice-that-boosts-immunity-it-tastes-amazing-people
garlic-pepper-rice-that-boosts-immunity-it-tastes-amazing-people

நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் “பூண்டு மிளகு சாதம்”- இப்படி செய்தால் அட்டகாசமான சுவையில் இருக்கும் மக்களே!!

இன்றைய காலத்தில் பல்வேறு நோய் பாதிப்புகள் எளிதில் பரவி விடுகிறது.இதற்கு காரணம் ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருப்பது தான்.உணவை ருசிக்காக மட்டும் இன்றி உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் விதமாகவும் எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

நம் உணவில் வாசனைக்காக பயன்படுத்தும் பூண்டு மற்றும் மிளகில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.பூண்டில் வைட்டமின் சி,பி6,கால்சியம், காப்பர்,மெக்னிசியம், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.

அதேபோல் மிளகில் அதிகளவு வைட்டமின் ஏ,சி,கே,கரோடின்கள்,இரும்புச்சத்து,மாங்கனீசு, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்டவை அதிகம் நிறைந்து இருக்கிறது.இந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*பூண்டு – 10 பற்கள்

*மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி

*வடித்த சாதம் – 1 கப்

*கடுகு – 1/2 தேக்கரண்டி

*உளுந்து பருப்பு – 1/2 தேக்கரண்டி

*கடலை பருப்பு – 1/2 தேக்கரண்டி

*வர மிளகாய் – 3

*பெரிய வெங்காயம் – 1(நறுக்கியது)

*கறிவேப்பிலை – 2 கொத்து

*கொத்தமல்லி தழை – சிறிதளவு(நறுக்கியது)

*நெய் – தேவையான அளவு

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

பூண்டு மிளகு சாதம் செய்வதற்கு முதலில் எடுத்து வைத்துள்ள பெரிய வெங்காயம், கொத்தமல்லி,பூண்டை உள்ளிட்ட பொருட்களை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் அதை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து தேவையான அளவு நெய் சேர்த்துக் கொள்ளவும்.
நெய் உருகி சூடானதும் அதில் 1/2 தேக்கரண்டி கடுகு,1/2 தேக்கரண்டி உளுந்து பருப்பு,1/2 தேக்கரண்டி கடலைப் பருப்பு சேர்த்து பொரிய விடவும்.பின்னர் 3 வர மிளகாய்,2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து கொள்ளவும்.

அடுத்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.பிறகு பொடித்து வைத்துள்ள 10 பூண்டு பற்கள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

பின்னர் வடித்து எடுத்து வைத்துள்ள 1 கப் சாதத்தை சேர்த்து மிதமான தீயில் மெதுவாக கிளறவும்.இறுதியாக 1 தேக்கரண்டி மிளகுத் தூள் மற்றும் சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைக்கவும்.

Previous articleமுகம் அழகாகவும் பொலிவாகவும் இருக்க இந்த 3 பொருட்களை பயன்படுத்துங்கள் போதும்!! ஒரே வாரத்தில் தீர்வு கிடைக்கும்!!
Next articleகல்லீரலை பாதுகாக்கும் “அரைக்கீரை” குழம்பு – சுவையாக செய்வது எப்படி?