இந்த சாரையாவது கைது செய்யுமா திமுக அரசு? வசமாக சிக்கிக்கொண்ட திமுக பிரபலம்!

0
79
DMK is unable to fulfill the promise.. Government employees are demanding at once!! Stalin under pressure!!
DMK is unable to fulfill the promise.. Government employees are demanding at once!! Stalin under pressure!!

நாட்டில் எப்போதும் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் யாரையும் மதிக்க மாட்டார்கள். போலீஸ், நீதிமன்றம் எதற்கும் அடிபணிய மாட்டார்கள். அவர்கள் வைத்தது தான் சட்டம் என்கிற ரீதியில் செயல்படுவார்கள். குறிப்பாக தற்போது நடக்கும் திமுக ஆட்சியில் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் பலர் இந்த மாதிரியான அதிகார துஸ்பிரயோக செயல்களில் அதிகம் ஈடுபடுகிறார்கள்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் திமுக கட்சியின் மேடைப் பேச்சாளர். பிரச்சார நேரங்களிலும், திமுக மேடைகளிலும் இவர் திமுகவிற்கு ஆதரவாக மேடை பேச்சுக்களை பதிவு செய்வார். இவர் மீது தற்போது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவர் கிட்னி திருட்டில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பணத்தேவை இருக்கும் ஏழை எளிய மக்களை அணுகி அவர்களிடம் பேரம் பேசி தனியார் மருத்துவமனைகளுக்கு அவர்களை அழைத்து சென்று கிட்னி விற்கும் வேலையை இவர் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவருக்கு இன்னொரு பேர் இருக்கு, புரோக்கர் ஆனந்தன். இந்த கிட்னி திருட்டு சம்பவத்தில் இவருக்கு மட்டும் தான் தொடர்பு உள்ளதா, அல்லது இன்னும் யாரேனும் முக்கிய பிரபலங்களும் சம்மந்தப்பட்டுள்ளார்களா என்று தெரியவில்லை. இது ஒரு மிகப்பெரிய நெட்ஒர்க் என்றும், பல ஆளும்கட்சி புள்ளிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். இந்த திமுக சார் ஆனந்தன் மீதாவது திமுக அரசு நடவடிக்கை எடுக்குமா? இல்ல, எப்பவும் போல இதையும் கண்டு கொள்ளாமல் போய்விடுமா என்று எதிர்க்கட்சியினர் திமுக மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.

Previous articleவம்படியாக வாயை கொடுத்து எடப்பாடியிடம் வசமாக மாட்டிக்கொண்ட முதல்வர்!
Next article“காப்பாத்துங்க”.. விஜய்யிடம் ஓடும் இபிஎஸ் காங்கிரஸ்!!டீலில் தள்ளப்படும் பாஜக மற்றும் திமுக!!