அமீரகத்தில் இந்த மூன்று இடங்களில் போட்டி நடைபெறும்?

0
190
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் ஐபிஎல் தொடரை இப்போதைக்கு இந்தியாவில் நடத்த முடியாது. அதனால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது இதற்காக எட்டு அணி வீரர்களும் ஏற்கனவே துபாய்க்கு சென்று விட்டனர். அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் நடைபெற இருக்கின்றன. தற்போது 8 அணி வீரர்களும் மூன்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  தற்போது கொரோனா காலம் என்பதால் தனிமைப்படுத்துதல், கொரோனா பரிசோதனை முக்கிய பங்கு வகிக்கிறது.
குறிப்பாக ஷார்ஜாவில் இருந்து துபாய்க்கும், துபாயில் இருந்து அபுதாபிக்கும், அபுதாபியில் இருந்து ஷார்ஜாவுக்கும் வீரர்கள் செல்ல வேண்டியிருக்கும். அப்போது தனிமைப்படுத்துதல், கொரோனா பரிசோதனை போன்ற சிக்கல் ஏற்பட வாய்புள்ளது. ஏனென்றால் மூன்று இடங்களிலும் கொரோனா வழிகாட்டுதல் முறை வெவ்வேறானவை. இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கான அனைத்து அனுமதியும் பெற்றுள்ளோம் என்று ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
Previous articleதிருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு
Next articleரஷ்யாவில் இத்தனை லட்சத்தை தாண்டியதா கொரோனா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here