தாத்தா பேரன் கூட்டு பலாத்காரம்:! சிறுமி எரித்துக்கொலை! தொடரும் பாலியல் குற்றங்கள்!!

0
234

தாத்தா பேரன் கூட்டு பலாத்காரம்:! சிறுமி எரித்துக் கொலை! தொடரும் பாலியல் குற்றங்கள்!!

பஞ்சாப் மாநிலம்,தண்டாப் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்னர் பாதி எரிந்த நிலையில் 6 வயது சிறுமியின் உடலை மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதி உடல் எரிந்து கிடந்த நிலையில் சிறுமியின் உடலை மீட்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பெயரில்,ஜலல்பூர் பகுதியைச் சேர்ந்த சுப்ரீத் சிங் மற்றும் அவரது தாத்தாவான சுர்ஜித் சிங் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிறுமி காணாமல் போன அன்று மதியம்,தனது மகளுக்கு பிஸ்கட் வாங்கி தருவதாக கூறி சுப்ரீத் சிங் குழந்தையைத் தூக்கி சென்றதாகவும் அதன் பின்னர் சிறுமி வீடு திரும்பவில்லை என்றும்,இதைத் தொடர்ந்து அவளது உடலானது மூன்று நாட்களுக்கு பிறகு பாதி எரிந்த நிலையில் சுப்ரீத் சிங்-ன் மாட்டு கொட்டகைக்கு அருகில் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை ஆதாரங்களை அழிக்க முற்படுதல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தாத்தா மற்றும் பேரன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Previous articleமீண்டுமொரு ஹத்ராஸ் சம்பவம்:! 9 மற்றும் 12 வயது சிறுவர்கள் 4 வயது சிறுமியை நாசம் செய்த அவலம்!
Next articleDating செய்ய ஹோட்டலுக்கு சென்ற காதலர்கள்! அய்யய்யோ என்னால முடியாது ஆளவிடுமா ஓடிய காதலன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here