தொகுதிப் பங்கீட்டில் தொடர் இழுபறி – தேமுதிக- அதிமுக மீண்டும் பேச்சுவார்தத்தை

0
224
OPS-meets-Vijayakanth-AIADMK-DMK-deal-done
OPS-meets-Vijayakanth-AIADMK-DMK-deal-done

தொகுதிப் பங்கீட்டில் தொடர் இழுபறி – தேமுதிக- அதிமுக மீண்டும் பேச்சுவார்தத்தை

அ.தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளன. அந்தக்கூட்டணி கட்சிகளில் ஒன்றான பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு, அந்தக் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இதனிடையே, மற்றொரு கூட்டணிக் கட்சியான தேமுதிகவுடன் அதிமுக. தொடர் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
தேமுதிக தரப்பில் 30 தொகுதிகள் கேட்கப்படும் நிலையில், அதிமுக தரப்பில் 14 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்க முன்வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தமுறையும் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாவிட்டால், அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தேமுதிக இறங்கும் எனத் தெரிகிறது.

Previous articleநைஜீரியா நாட்டில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் 279 பேர் விடுவிப்பு
Next articleபிள்ளையாரை எவ்வாறு வணங்கலாம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here