ஆடி மாதத்தின் பல்வேறு சிறப்பு வழிபாடுகள்!

0
163

ஆடிமாதம் பிறந்தவுடனேயே தட்சிணாயன புண்ணிய காலம் ஆரம்பமாகும். இது மார்கழி மாதம் வரையில் நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது இந்த புண்ணிய காலத்தில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் சிறப்பு என்று சொல்லப்படுகிறது.

ஆடி மாதத்தில் கிராமங்களின் காவல் தெய்வமாக இருக்கும் மாரியம்மன், அய்யனார், மதுரைவீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு பூஜைகளும் விழாக்களும் நடைபெறுவது வழக்கம்.

ஆடி மாதத்தில்தான் ஆடி தபசு கொண்டாடப்படும் ஹரியும், சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை இந்த உலகத்திற்கு எடுத்து உணர்த்த இந்த விழா நடத்தப் படுவதாக சொல்லப்படுகிறது. ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பித்ரு கடமைகளைச் செய்தால் ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆடி பவுர்ணமி தினம் ஒன்று ஹயகிரிவர் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்களில் சொல்லப்படுகிறது.

Previous articleபேட்மின்டன் மிக்ஸ்டு டபுள் வெண்கல பதக்கம் வென்றது ஜப்பான் ஜோடி.
Next articleமகா விஷ்ணுவிற்கு பிடித்தமான அந்த பன்னிரண்டு பெயர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here