சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு.!! பொதுமக்கள் ஷாக்.!!

0
225

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 15 ரூபாய் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்ற நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துக்கொண்டே செல்வதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் வீடுகளில் தற்போது பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளது. அதன்படி சிலிண்டர் விலை மேலும் 15 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது 915 ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீரென அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Previous articleகுடிபழக்கம் தீர வேண்டுமென்றால் இதை செய்யுங்கள் என்ற தோழி! நகையை பறிகொடுத்த பரிதாபம்!
Next articleகலாச்சார விழாவுக்கு கூட்டணி சேர்ந்த பிரபலங்கள்! களை கட்டும் திருவிழா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here