25 லட்சத்தில் ஒருவரை மட்டும் தாக்கும் நோயில் சிக்கிய சிறுமி! உங்கள் குழந்தையும் இதுபோல சிம்டம்ஸ் உடன் இருந்தால் உடனே கவனியுங்கள்!

0
102
A girl who has a disease that affects only one in 25 lakh! If your child has similar symptoms, watch out!
A girl who has a disease that affects only one in 25 lakh! If your child has similar symptoms, watch out!

25 லட்சத்தில் ஒருவரை மட்டும் தாக்கும் நோயில் சிக்கிய சிறுமி! உங்கள் குழந்தையும் இதுபோல சிம்டம்ஸ் உடன் இருந்தால் உடனே கவனியுங்கள்!

சில நோய் வகைகள் கோடியில் ஒருத்தருக்கு லட்சத்தில் ஒருத்தருக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிறுமிக்கு லட்சத்தில் ஒருத்தருக்கு ஏற்புடைய பாதிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்லும் வழியில் வத்தலகுண்டு என்ற பகுதி உள்ளது. அந்த பகுதியில் வசித்து வருபவர் தான் பாண்டீஸ்வர் மற்றும் அவரது மனைவி அன்னக்கொடி. இவர் அரசு போக்குவரத்து துறையில் வேலை செய்து வருகிறார்.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார். இவரது மகள் ஜமுனாவிற்கு தற்பொழுது 17 வயது ஆகிறது. இவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து. 2014 ஆம் ஆண்டு முதல் இவரது மகள் ஜமுனாவுக்கு மூச்சு திணறல் பிரச்சனை இருந்து வந்துள்ளது. முதலில் இந்தப் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளனர். நாளடைவில் ஜமுனாவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். பிறகு இவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர். மருத்துவர்கள் ஜமுனாவை பரிசோதனை செய்த பல திடுக்கிடும் உண்மைகளை தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் கூறியதாவது, 25 லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படக்கூடிய சிஸ்டம் ஸ்கலிரோசஸ் என்ற புது வகையான நோய் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சிஸ்டம் ஸ்கலிரோசீஸ் என்பது தன்னுடல் தாக்கல் கோளாறு எனக் கூறியுள்ளனர். இந்த கோளாறால் உடலில் உள்ள இணைப்பு திசுக்களில் தேவையற்ற வளர்ச்சி ஏற்படுத்தும். அந்த வளர்ச்சியின் காரணமாக தோலின் அமைப்பு மாறுபடும். அதனால் உடலில் வீக்கம் வலி உண்டாகும். இதனை அடுத்து இதயம் ரத்தக்குழாய் செரிமான அமைப்பு நுரையீரல் சிறுநீரகம் என அனைத்தும் தொடர்ந்து பாதிப்பை சந்திப்போம். இந்த இணைப்பு திசுக்களால் நுரையீரல் பாதிக்கப்படுமாயின் நுரையீரலில் உள்ள தமனையில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.

குறுகிய தமனிகள் இருப்பதால் இதயம் அதற்கான ரத்தத்தை போதுமான அளவிற்கு பம் செய்ய முடிவதில்லை. இதனால் ரத்த அழுத்தம் அதிகமாகிறது. ரத்த அழுத்தம் அதிகம் ஆவதால் மூச்சு திணறல் ஏற்பட்டு மூளைக்கு ஆக்சிஜன் செல்வதில்லை. இதனால் மயக்கம் வருகிறது இவ்வாறு மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இவ்வாறு இருப்பவர்கள் எந்த சூழலில் வேணாலும் மயங்கி வில நேரிடலாம். அதனால் ஜமுனா பள்ளிக்கு செல்வதை அவரது பெற்றோர்கள் நிறுத்தி விட்டனர்.

இதனை குணப்படுத்தவும் முடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். வேண்டுமானால் வாழ்நாள் முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டரோடு வாழ நேரிடும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த நோயினால் எச் சமயத்திலும் ஆக்சிஜன் இன்று இருந்தால் உயிர் பிரிய கூட நேரிடும். மாதந்தோறும் இக்குழந்தையின் மருத்துவ செலவிற்கு ரூ.20,000 முதல் செலவாகிறது. இவரது பெற்றோர்களால் அதை சமாளிக்க முடியாதா முதல்வர் கவனத்திற்கு இதனை கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.