மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு தனியாக ஏ.டி.எம் கார்டு!!! வெளியான அறிவிப்பு!!! 

0
45
#image_title

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு தனியாக ஏ.டி.எம் கார்டு!!! வெளியான அறிவிப்பு!!!

குடும்பத் தலைவிகள் மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கு தனியாக ஏ.டி.எம் கார்டு உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இந்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை பெறும் உரிமைத் தொகை திட்டத்தை திமுக தலைமையிலான தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் உதவித் தொகை பெறுவதற்கு தமிழகம் முழுவதும் சுமார் 1 கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விண்ணப்பித்தவர்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. சுமார் ஒரு வாரமாக நடைபெற்ற இந்த கள ஆய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து மாதந்தோறும் 1000 ரூபாய் விண்ணப்பித்தவர்களின் வங்கிக் கணக்குகளில் சரியாக செலுத்தப்படவுள்ளது. வங்கி கணக்குகள் இல்லாதவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது கூட்டுறவு வங்கிகள் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தகுதியான பெண்களுக்கு 1000 ருபாய் வழங்குவதற்கு தனியாக என்று ஏ.டி.ஏம் கார்டுகள் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரூபே கார்டாக உருவாகி வரும் இந்த ஏ.டி.எம் கார்ட் மூலமாக 1000 ரூபாயை எடுத்துக் கொள்ளலாம்.

மாதந்தோறும் பெண்களுக்கு 1000 ரூபாய் உதவித் தொகை பெறும் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் வரும் செப்டம்பர் 15ம் தேதி அதாவது அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கவுள்ளார்.

முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தவுடன் பெண்களுக்கு அனைவருடைய வங்கி கணக்குகளிலும் 1000 ரூபாய் செலுத்தப்படவுள்ளது. மேலும் மாதந்தோறும் 1ம் தேதி அனைத்து பெண்களின் வங்கி கணக்குகளிலும் 1000 ரூபாய் அனுப்பப்படும்.

மகளிர் உரிமைத் தொகைக்கான ஏ.டி.ஏம் கார்டுகள் குடும்பத் தலைவிகளுக்கு ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படவுள்ளது. நிராகராப்பு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரும் அவரவர் பகுதியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகம் சென்று முறையிட்டு நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.