நாய்களுக்கு உணவளிக்க தனியாக ஒரு இடம்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!

0
115
#image_title

நாய்களுக்கு உணவளிக்க தனியாக ஒரு இடம்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

சென்னையில் தெரு நாய்களுக்கு உணவளிப்பதற்கு என்றே தனியாக ஒரு இடத்தை ஒதுக்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சென்னை மாநகரில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தெருநாய்கள் உள்ளன. சென்னை மாநகராட்சிக்கு வரும் புகார்களில் அதிகபட்சமாக நாய்கள் தொடர்பான புகார்கள் தான் வருகின்றது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் தெருநாய்களுக்கு உணவு அளிக்கும் நாய்ப் பிரியர்கள் மீது தான் இந்த புகார்கள் அதிகம் வருகின்றது.

சென்னை மாநகராட்சி நாய்கள் தொடர்பாக புகார்களை அறிவிக்க 1913 என்ற உதவி எண்ணை அறிவித்தது. இதில் ஒரு நாளுக்கு 80 புகார்கள் நாய்கள் தொடர்பாக வருகின்றது. தெரு நாய்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க தெரு நாய்களுக்கு  கருத்தடை செய்து ஊசி போட்டு மீண்டும் அதே பகுதிகளில் விடப்படுகின்றது. இதையடுத்து குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு நாய்ப் பிரியர்கள் அதே இடத்தில் உணவளிப்பதால் மக்கள் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

இதையடுத்து இந்த பிரச்சனையை சரிசெய்ய சென்னை மாநாகராட்சி தெரு நாய்களுக்கு உணவு அளிக்க தனியாக ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்வது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் “குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு உணவளிக்க தனியாக இடம் ஒதுக்கீடு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

ஆனால் இதை மீறி தெருநாய்களுக்கு உணவளிக்கும் நபர்களுக்கு வழங்கப்படும் தண்டனை பற்றி குறிப்பிடவில்லை. ஆனால் விதியை மீறி குடியிருப்பு பகுதிகளில் தெரு நாய்களுக்கு உணவளிக்கும் நபர்களுக்கு விரைவில் தண்டனை முடிவு செய்யப்பட்டு வழங்கப்படும்” என்று கூறியுள்ளனர்.