நீண்ட மாங்கல்ய பாக்கியம் பெற! வெள்ளிக்கிழமையன்று இப்படி பூஜை செய்யுங்கள்!

0
339

நீண்ட மாங்கல்ய பாக்கியம் பெற! வெள்ளிக்கிழமையன்று இப்படி பூஜை செய்யுங்கள்!

வெள்ளிக்கிழமை என்பது அனைத்து பெண்களுக்கும் ஒரு சிறப்பான நாளாகும்.பெண்கள் தனக்காக மட்டுமின்றி தனது குடும்பத்திற்காகவும், கணவனுக்காவும்,
தனது பிள்ளைகளுக்காகவும், வாரத்தின் ஏதோ ஒரு தினத்தில் விரதமிருந்து தெய்வத்தை வழிபாடு செய்கின்றனர்.மற்ற நாட்களை விட வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபட்டால் பல்வேறு பாக்கியங்கள் நமக்கு கிட்டும்.

தன் கணவனுக்காக மாங்கல்ய பாக்கியம் பெற வேண்டுமென்று வழிபாடு செய்யும் பெண்கள் வெள்ளிக்கிழமையன்று இந்த தெய்வத்தை வழிபட்டு வந்தால் உங்கள் கணவனின் ஆயிலும் அவரது உடல்நலமும் பெருகும் என்பது ஆன்மீக ரீதியாக நம்பப்படுகிறது.

வெள்ளிக்கிழமையில் காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்குள் துர்க்கை அம்மனுக்கு தேங்காய் சாதம் அல்லது பாயசம் நைவேத்யமாக படைத்து,எலுமிச்சம் பழத்தைப் பிழிந்துவிட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு எலுமிச்சை தீபம் ஏற்றி வாரம் தோறும் வழிபட்டு வந்தாள் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை.

Previous articleஉங்க வீட்டில் வலம்புரி சங்கு இருக்கிறதா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க!
Next articleKanavu Palangal in Tamil : இவ்வாறெல்லாம் கனவு வருகின்றதா? பலன்கள் இதோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here