நாட்டில் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 140 கோடியை கடந்தது!

0
97

இந்தியாவில் நோய் தொற்று தடுப்பூசிகள் செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசி செலுத்துவதில் முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த ஜூன் மாதத்திலிருந்து நாடுமுழுவதும் 18 வயதிருக்கும் மேற்பட்டோர் எல்லோருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது
.

அதோடு தடுப்பூசியை செலுத்துவதில் இந்தியா மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறது. அதாவது சீனாவிற்கு அடுத்தபடியாக 100 கோடி தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன. இது சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா செய்த மாபெரும் சாதனை.

இந்தியாவில் 100 கோடி தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டபோது அதனை ஊக்குவிக்கும் விதத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் இது உலக அளவில் நாம் செய்திருக்கும் மாபெரும் சாதனை என்றும், இன்னும் பல கோடி தடுப்பூசிகள் நாம் செலுத்தப்பட வேண்டியிருக்கிறது. நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது என்று கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலையில், நாட்டில் நேற்று 51 லட்சத்திற்கும் அதிகமான நோய் தொற்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருப்பதுடன் இதன் மூலமாக நாட்டில் ஒட்டு மொத்தமாக 140.24 கோடி தவணைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.